ஆஸ்கர் ரவிச்சந்திரன் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டது- அதிர்ச்சியில் திரையுலகம்

ஆஸ்கர் ரவிச்சந்திரன் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டது- அதிர்ச்சியில் திரையுலகம் - Cineulagam

தமிழ் சினிமாவில் பல பிரமாண்ட படங்களை தயாரித்தவர் ரவிச்சந்திரன். இவர் தயாரிப்பில் இந்த வருடம் ஐ என்ற மாபெரும் பிரமாண்ட படம் வெளிவந்தது.

மேலும், இவர் தயாரிப்பில் விஸ்வரூபம்-2, பூலோகம் என பெரிய பட்ஜெட் படங்கள் வெயிட்டிங். இந்நிலையில் இவர் இந்த படங்களுக்காக வாங்கிய கடன் ரூ 97 கோடி வரை மீதம் உள்ளது.

இதனால் பிரபல வங்கி இவருடைய அலுவலகம், வீடு, திரையரங்குகள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது. இதை அறிந்த பல திரை நட்சத்திரங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

-http://www.cineulagam.com

ஆஸ்கர் ரவிசந்திரன் சொத்துக்களை பறிமுதல் செய்த வங்கி: ஐ நஷ்டம் காரணமா?

அந்நியன், தசாவதாரம், ஐ போன்ற பிரமாண்டமான வெற்றிபடங்களை தயாரித்த ஆஸ்கர் ரவிசந்திரனின் சொத்துக்களை வங்கி பறிமுதல் செய்தது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வினியோகஸ்தராக இருந்து வானத்தப்போல படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறியவர் ரவிசந்திரன். இவர் தனது ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ரமணா, அந்நியன், தசாவதாரம், ரோஜா கூட்டம் உள்ளிட்ட பல பிரமாண்டமான படங்களை தயாரித்தார். சமீபத்தில் இவர் தயாரித்து வெளிவந்த ஐ  ரூ 80 கோடியில் தயாரானதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பூலோகம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்து வந்தார். இந்த படங்கள் என்று வெளிவரும் என தெரியாதே நிலையே தற்போது உள்ளது.

இத்திரைப்படங்களின் தயாரிப்பிற்காக வங்கி ஒன்றில் அவர் 100 வரை கோடி வரை கடன் பெற்றிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் சென்னை அசோக் நகரில் உள்ள ஆஸ்கார் ரவியின் அலுவலகம், அபிராமபுரத்தில் அவர் வசிக்கும் வீடு, மற்றும் வேலூரில் உள்ள அவரது சந்தோஷ், சப்னா, சாந்தம் என மூன்று தியேட்டர்கள் ஆகிய சொத்துகளை வங்கின் பறிமுதல் செய்தது.இது குறித்த சொத்து சுவாதீன அறிவிப்பைவெளியிட்டிருக்கிறது அந்த வங்கி.

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஐ  இவர் அதிக பொருட்செலவில் தயாரித்தார். மேலும் உலகமெங்கும் அதிக திரையரங்குகளில் வெளிவந்தன. அதுமட்டுமின்றி படம் 100 கோடிக்கு மேல் வசூலானது என்றும் ஆஸ்கர் பிலிம்ஸ் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனால் ஐ படம் எதிர்பாத்த வசூலை பெறவில்லை என்றும், ஒரே நேரத்தில் பல படங்களை அவர் தயாரிதததே இந்த நிலைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

-http://www.dinamani.com