பாராட்டுகளைக் குவிக்கும் புறம்போக்கு எனும் பொதுவுடைமை..

purampokkuஎஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் புறம்போக்கு எனும் பொதுவுடையமை அனைத்துத் தரப்பினரிடையேயும் நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இயக்குநர் ஜனநாதனுக்கு மிகுந்த நிறைவைத் தந்துள்ளது இந்த வரவேற்பு.

ஒரு மரணதண்டனைக் கைதி, அவரைத் தூக்கில் தொங்கவிடும் கடமையை ஏற்றுக்கொண்ட காவல்அதிகாரி, தூக்குப்போடுகிற வேலையைச் செய்கிற ஊழியர் ஆகிய மூவருக்கிடையிலான நிகழ்வுகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த அரசியல் படம் மக்களுக்கான படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளதாக பாராட்டுகள் குவிந்துள்ளன.

குறிப்பாக நக்ஸலைட்டுகள் எனும் மாவோயிஸ்டுகள் பற்றி தமிழில் அழுத்தமான படம் ஒன்று வந்ததே இல்லை. முன்பு ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன்தான் அப்படி வந்த படம். ஆனால் அது வணிக ரீதியான ஒருதலைப்பட்சமான பார்வையாகவே அமைந்துவிட்டது.

வெறும் சினிமாவுக்கான கதையாக இல்லாமல், படத்தின் காட்சிகளில் இன்றைய அரசியல் அவலங்களைச் சொன்னது, குரலற்றவர்களுக்கான குரலாய் சில காட்சிகள் வைத்திருப்பது.. என படம் தமிழ் சினிமாவின் புதிய முகமாகத் தெரிவதாக நேற்று படம் பார்த்த மூத்த அரசியல் தலைவவர் நல்லக்கண்ணு உள்ளிட்ட பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

படத்தில் நடித்துள்ள ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் ஆகியோருக்கும் பாராட்டுகள் குவிகின்றன.

tamil.filmibeat.com