தனுஷ் படங்களில் புகை பிடித்தல் மற்றும் மது அருந்தும் காட்சிகள் இடம் பெறுகின்றன. ஏற்கனவே நடித்த ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்தில் தனுஷ் ஸ்டைலாக புகை பிடிக்கும் படத்தை போஸ்டர்களாக அச்சிட்டு சென்னை நகரம் முழுவதும் ஒட்டினார்கள். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. போஸ்டர்களும் கிழிக்கப்பட்டன.
தனுஷ் இதுபோன்ற காட்சிகளில் நடிக்கக்கூடாது என்றும் வற்புறுத்தப்பட்டது. இதுபோல் ‘மரியான்’, ‘அநேகன்’ படங்களிலும் புகை பிடிக்கும் காட்சிகள் இருந்தது. தற்போது ‘மாரி’ என்ற படத்தில் தனுஷ் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படத்தின் சிறிய டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதிலும் தனுஷ் புகை பிடிக்கும் காட்சிகள் உள்ளன. இதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.
ரஜினி தனது படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளை வைப்பது இல்லை. ஆனால் தனுஷ் அதுபோன்ற காட்சிகளில் நடிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். தேசிய விருது பெற்ற நடிகருக்கு சமூக பொறுப்பு வேண்டும்.
புகை பிடிப்பது தான் ஆண்மையின் அடையாளமா?. புகை பிடிக்கும் காட்சியுடன் கூடிய டிரெய்லர் கண்டிக்கத்தக்கதாக இருக்கிறது என்றெல்லாம் கருத்துக்களை பதிவு செய்து எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
-http://123tamilcinema.com


























சமூக பொறுப்போ அல்லது பருப்போ கிடையாது. பணம் பண்ணினால் மட்டும் போதும்…..
தனுஷ் பற்றி எதுவும் குறை சொல்லாதிங்க பிறகு இளைஞர் கூட்டம் தற்கொலை செய்துகொள்வார்கள்
மது அருந்தும் காட்சிகள் சினிமா .மற்றும் சீரியல்களில் கண்பிக்கப்ப
டுகின்றன சமுக வலைத்தங்கள் வரிந்துகட்டாதது என்?நான் நடிகனை
ஆதரிப்பவன் அல்ல!;
சமூக அக்கறை இல்லாதவர்களின் படங்களைப் பார்க்காமலிருப்பதே நம் மக்களுக்கு நாம் செய்யும் சேவை.
சம்மோக அக்கறை இல்லாத நடிகர்களின் படங்களை எதிர்க்க வேண்டும். இவனின் மாமன் ரஜினி எதிர்ப்பு கிளம்பியதும் புகை பிடிப்பதை நிறுத்தினான்.