சிவகார்த்திகேயன் படங்கள் ஹிட்டாவதால் அவரை விளம்பர படங்களில் ஒப்பந்தம் செய்ய பிரபல நிறுவனங்கள் படையெடுக்கின்றன. பெரிய தொகை சம்பளமாக தருவதாகவும் ஆசை காட்டுகின்றன.
சமீபத்தில் ஜவுளிக்கடை விளம்பரபடமொன்றில் நடித்தார். அதைத் தொடர்ந்து அவரை குளிர்பான விளம்பர படமொன்றில் நடிக்கவும் அணுகினர். ஆனால் அதில் நடிக்க மறுத்து விட்டார். ரசிகர்களுக்கு கேடு விளைவிக்கும் எந்தவிதமான விளம்பரங்களிலும் நடிக்க மாட்டேன் என்று அவர் கூறினார்.
சிவகார்த்திகேயன் தற்போது ‘ரஜினி முருகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பொன்ராம் இயக்குகிறார். அடுத்து ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
-http://cinema.maalaimalar.com


























வாழ்த்துகிறேன்! சமூக அக்கறை உள்ளவர்களின் படங்களைப் பார்க்கலாம்!