காலம்காலமாக தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த பெண் பேய்களை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர் நமது கதாநாயகர்கள் ஆமாம் இந்த ஆண்டு வெளிவந்த மூன்று பேய் படங்களுமே தற்போது வெற்றி பெற்று விட்டன.
இவற்றில் குறிப்பிடத் தகுந்த ஒரு விஷயம் என்னவெனில் மூன்று பேய் படங்களுமே ஆண் பேய்களை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்டவை டார்லிங் காஞ்சனா 2 மற்றும் டிமாண்டி காலனி ஆகிய மூன்று படங்களுமே மிகப் பெரிய வெற்றியைருசித்து உள்ளது.
தமிழ் சினிமாவில காலம் காலமா வர்ற ஒரு விஷயம் பேய் படம்னா அது ஒரு பெண்ணா தான் இருக்கும் தன்னைக் கொன்னவங்களத் தேடித்தேடி அது பழிவாங்கும் பெரும்பாலும் கதாநாயகனோட அம்மா மற்றும் அவங்கள சேர்ந்தவங்க நம்ம ஹீரோயின கொன்னுடுவாங்க ஹீரோவோட மனச மாத்தி அவர இன்னொரு கல்யாணம் பண்ணிக்க வச்சிடுவாங்க.
இதையெல்லாம் மாத்தி இப்போ ஹீரோ பேயா வர ஆரம்பிச்சிடாரு இந்த வருசத்துல வந்த 3 பேய் படங்களுமே நல்ல வெற்றியைத் தேடித் தந்ததா விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சொல்லி இருக்காங்க.
டார்லிங் வெளிவந்தப்ப ஐ மற்றும் ஆம்பள படங்களோட போட்டி போட்டு வெற்றி பெற்றது, காஞ்சனா 2 மணிரத்னத்தின் ஒ காதல் கண்மணியோட போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றது, டிமாண்டி காலனி வெளியானப்ப எந்த பெரிய படங்களும்இல்ல ஆனா தன்னோட வெளிவந்த அத்தன படங்கள விடவும் வசூலில் போட்டியிட்டு முன்னணியில் உள்ளது.
இன்னும் 2 நாள்ல நம்ம சூர்யா படம் மாசு என்கிற மாசிலாமணி வெளியாகுது..பார்க்கலாம் வசூல்ல சாதனை படைக்குதான்னு..