முதல் அரையாண்டில் கலக்கிய, சொதப்பிய படங்கள்- ஒரு பார்வை

முதல் அரையாண்டில் கலக்கிய, சொதப்பிய படங்கள்- ஒரு பார்வை - Cineulagam

இந்த வருடம் தமிழ் சினிமாவில் நாம் விரும்பிய பல நடிகர்களின் படங்கள் ரிலிஸானது, அது மட்டுமின்றி நாம் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த சில படங்களும் ரிலிஸானது. இதில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இவ்வருடத்தின் அரையாண்டு கூட முடியாத நிலையில் எதிர்ப்பார்த்ததை விட அதிகமாக படங்கள் ஹிட் வரிசையில் இடம்பெற்றுள்ளது.

இதில் ஐ, என்னை அறிந்தால், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், டார்லிங், அனேகன், காக்கிசட்டை, 36 வயதினிலே, டிமான்டி காலனி, காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி ஆகியவை ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளது. இதில் ஐ, என்னை அறிந்தால், அனேகன், காக்கிசட்டை, காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி ஆகிய படங்கள் பெரிய வசூலை தந்ததுள்ளது.

வசூலையும் தாண்டி நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக உத்தம வில்லன், 36 வயதினிலே, புறம்போக்கு, கள்ளப்படம் ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் சகாப்தம், டூரிங் டாக்கிஸ், வஜ்ரம், திறந்துடு சீசே, வலியவன், எனக்குள் ஒருவன் ஆகிய படங்கள் படு தோல்வியடைந்தது. பெரிதும் எதிர்ப்பார்த்த நண்பேண்டா ரசிகர்களை ஏமாற்றியது.

இவனுக்கு தண்ணில கண்டம், ராஜதந்திரம், ஆம்பளம், கொம்பன் ஆகிய படங்கள் டீசன்ட்டான லாபத்தை கொடுத்த படங்கள்.

-http://www.cineulagam.com