கோலிவுட்டில் 80, 90 களின் பிஸி ஹீரோக்கள் வரிசையில் தனக்கென ஒரு இடம் பிடித்து வைத்திருந்தவர் கார்த்திக்.
கடந்த 2006ம் ஆண்டு அரசியலில் குதித்து அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற தனிக்கட்சி நடத்தி வருகிறார்.
நீண்ட இடைவெளிக்குபிறகு ‘அனேகன்’ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தார். தற்போது அமரன் 2ம் பாகத்தில் நடிக்கிறார்.
இதுபற்றி கார்த்திக் கூறியது:வெற்றி பெற்ற பல படங்கள் இருக்கும்போது அமரன் படத்திற்கு 2ம் பாகம் எடுப்பது ஏன் என்கிறார்கள். மற்ற படங்கள் கிளைமாக்ஸில் முடிந்தபிறகு தொடர்ச்சியாக கதையை நகர்த்துவதற்காக வாய்ப்பில்லை.
அமரன் படத்துக்கு அந்த வாய்ப்பு இருந்ததால் 2ம்பாகம் எடுக்கப்படுகிறது. சினிமாவிலிருந்து அரசியலுக்கு போனாலும் இரண்டையும் மறக்காமல் பணியாற்றி வருகிறேன்.
அமரன் முதல்பாகத்தை இயக்கிய கே.ராஜேஸ்வர் 2ம்பாகத்தையும் இயக்குகிறார். வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது. ஒரு பாடலும் சொந்த குரலில் பாடுகிறேன்.
ஜி.ஆர்.கிருஷ்ணா ஒளிப்பதிவு. கரிநந்த் இசை அமைக்க வைரமுத்து பாடல் எழுதுகிறார். என் மகன் கவுதமுடன் இணைந்து நடிப்பீர்களா என்கிறார்கள். பொருத்தமான ஸ்கிரிப்ட் வந்தால் சேர்ந்து நடிப்பேன்.
இவ்வாறு கார்த்திக் கூறினார்.
-http://cinema.dinakaran.com