சென்னை, : தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ், வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்து வெளியிட்ட படம், ‘காக்கா முட்டை’. எம்.மணிகண்டன் இயக்கினார். இதில் நடித்த விக்னேஷ், ரமேஷ் இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது.
இதையடுத்து அவர்களின் படிப்புச் செலவை தனுஷ், வெற்றிமாறன் ஏற்றனர். இப்போது விக்னேஷ், ரமேஷ் குடும்பம் மற்றும் அவர்களின் எதிர்காலத்துக்கான அனைத்து செலவுகளையும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சி, ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் ஷூட்டிங்கில் நடந்தது. தனுஷ், வெற்றிமாறன், எம்.மணிகண்டன், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் சி.இ.ஓ விஜய் சிங் கலந்துகொண்டனர்.
விக்னேஷ், ரமேஷ் இருவருக்கும் காசோலை வழங்கப்பட்டது. பிறகு தனுஷ் கூறும்போது. ‘விக்னேஷ், ரமேஷ் குடும்பம் மற்றும் அவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான உதவிகளை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ஏற்றுள்ளது. தொடர்ந்து ‘காக்கா முட்டை’ போன்ற தரமான படங்களை தர எங்கள் நிறுவனம் முயற்சிக்கும்’ என்றார்.
-cinema.dinakaran.com

























