சினிமாவை விட நாடகம்தான் முக்கியம் – ஒய்.ஜி.மகேந்திரன்

ygmசென்னை : ஒய்.ஜி.மகேந்திரன் தனது யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் சார்பில், நடித்து இயக்கும் நாடகம் ‘ெசாப்பன வாழ்வில்’. அவருடன் யுவ, சுப்புனி, தினகர், பிருந்தா நடிக்கிறார்கள். ரமேஷ் விநாயகம் இசை அமைக்கிறார். கோபு பாபு கதை எழுதியிருக்கிறார். இன்று மாலை 6 மணிக்கு வாணி மகாலில் அரங்கேற்றம் நடக்கிறது.

இதுபற்றி ஒய்.ஜி.மகேந்திரன் கூறியதாவது:என் தந்தை உருவாக்கிய இந்த நாடக கம்பெனியின் 65-வது நாடகம் இது. நான், எனது மகள், மகன் அனைவருமே நாடகத்துறையில் இருக்கிறோம்.

சினிமாவில் நடித்திருந்தாலும் நாடகம்தான் எனக்கு முக்கியம். இந்தக் கலையை அழியாமல் பாதுகாக்க வேண்டியது எங்கள் குடும்பத்தின் கடமை.

இப்போதும் படங்களிலும் சீரியலிலும் நடித்துக் கொண்டுதான் இருக்கிேறன். நாடகத்துக்கான நேரம்ேபாக மீதி நேரத்தில்தான் சினிமாவில் நடிக்கிறேன். ‘சொப்பன வாழ்வில்’ நாடகத்தில் மூளை வளர்ச்சி குறைந்தவனாக நடிக்கிறேன். உடலில் ஏதோ ஒரு குறைபாடுள்ளவர்களை கிண்டல் செய்யும்போது அவர்கள்படும் வேதனை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதுதான் நாடகத்தின் கதை.

பாதிக்கப்படும் அவர்கள், திருப்பி அடித்தால் எப்படி இருக்கும் என்பதை திகில் சுவையுடன் ெசால்கிறது நாடகம். சென்னையை அடுத்து வெளிநாடுகளில் இதை நடத்த இருக்கிறோம். ஸ்ரீராம் ப்ராபர்ட்டி நிறுவனத்தார் இதை தயாரித்து நடத்துகிறார்கள்.

-cinema.dinakaran.com