பேய் கதை, திகில் கதை என்று களங்களை அமைத்து ஐந்து அல்லது ஆறு என குறைந்தளவு நடிகர்களை வைத்தே சமீபத்திய படங்கள் தயாராகின்றன. இத்தருணத்தில் 30 நட்சத்திரங்கள் நடிக்கும் படம் ‘அதிபர்’ என்ற பெயரில் உருவாகிறது. மாயி, திவான், மாணிக்கம் படங்களை இயக்கிய சூர்யபிரகாஷ் இயக்குகிறார். அவர் கூறியது:வீரமற்ற விவேகம் கோழைத்தனம். விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம் என்பது கதை கரு. ஜீவன் ஹீரோ. வித்யா ஹீரோயின். இவர்களுடன் சமுத்திரக்கனி, நந்தா, ரஞ்சித், ரிச்சர்ட், தம்பி ராமையா, சங்கிலி முருகன், சிங்கமுத்து, பாவா லட்சுமணன், சரவண சுப்பையா, வையாபுரி, ராஜ்கபூர், மதன்பாப், பாரதிகண்ணன், மோகன்ராம், சம்பத்ராம். சிவசங்கர், டி.சிவகுமார், கதாக திருமாவளவன், மாயி சுந்தர், தெனாலி, கோவை செந்தில், அழகு உள்பட 30க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும். பிலிப்ஸ் விஜயகுமார் ஒளிப்பதிவு. விக்ரம் செல்வா இசை. டி.சிவகுமார் தயாரிப்பு. ஆக்ஷன், காமெடி கலந்தபடமாக இது உருவாகி இருக்கிறது.
-cinema.dinakaran.com

























