நகைச்சுவை நடிகர்களுடன் நடித்தால் தப்பா? கதாநாயகிகள் உர்

comadyகாமெடி நடிகர்கள் சந்தானம், வடிவேலு, விவேக் மூவருமே ஹீரோக்களாக நடிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் கோலிவுட்டில் நகைச்சுவை நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே நடித்து வரும் பரேட்டா சூரி தவிர படத்துக்கு படம் புதுநகைச்சுவை நடிகர்கள் அறிமுகமாகி வருகின்றனர். ஆனாலும் யாரும் பெயர் சொல்லும் அளவுக்கு வெற்றி பெறாததால் சூரி ஒருவரை மட்டுமே இயக்குனர்கள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஹீரோக்களாக மாறிய காமெடி நடிகர்கள் தங்களுக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க முயல்கின்றனர். ஸ்ரேயா, சதா இருவரும் வடிவேலுக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

பாலக்காட்டு மாதவன் படத்தில் ஹீரோவாக நடிக்கும்  விவேக்கிற்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடிக்கிறார். சந்தானத்துக்கு ஜோடியாக  கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் விசாகா சிங் நடித்தார்.

அடுத்து நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் ஆஷ்னா சவேரி நடித்தார். டாப் ஹீரோயின்கள் காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தால் அவர்களை முன்னணி ஹீரோக்கள் ஒதுக்கிவிடுகின்றனர் என்ற புகார் கோலிவுட்டில் உள்ளது.

இதுபற்றி காமெடி நடிகர்களுடன் ஜோடிபோட்ட ஹீரோயின்களிடம் கேட்டபோது ஒட்டுமொத்தமாக உர்ராகின்றனர். ‘ஹீரோக்கள் ஒரு பக்கம் ஜெயித்தாலும் காமெடி நடிகர்களும் ஹீரோவாக நடித்து ஜெயிக்கின்றனர்.

தவிர ஹீரோயின்களுக்கு தங்கள் நடிப்பை வெளிப்படுத்த நிறைய காட்சிகள் கிடைக்கிறது. காமெடி நடிகர்கள் ஜோடியாக நடிப்பதுபற்றி எங்களுக்கு கவலை எதுவும் இல்லை’ என்கின்றனர்.

-cinema.dinakaran.com