நஷ்ட ஈடு கேட்டு நெருக்கடி ரஜினி பட தயாரிப்பாளர் மும்பையில் தஞ்சம்

lingaa018ரஜினியின் ‘லிங்கா’ படத்தை தயாரித்தவர் ராக்லைன் வெங்கடேஷ். இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாததையடுத்து விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடுகேட்டு போராட்டம் நடத்துவது, வழக்கு தொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே இதுதொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் தனது பங்காக ரஜினி, வெங்கடேஷ் இருவரும் குறிப்பிட்ட தொகையை நஷ்ட ஈடாக அளித்தனர். ஆனாலும் பிரச்னை முற்றிலுமாக தீரவில்லை. இந்நிலையில் வெங்கடேஷ் இந்தி படம் தயாரிக்க மும்பையில் முகாமிட்டிருக்கிறார்.குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் சமீபத்தில் சிறை தண்டனை பெற்றவர் சல்மான்கான்.

இதில் ஜாமீன் பெற்ற சல்மான் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தை தயாரித்து நடித்து வருகிறார். அவருடன் ராக்லைன் வெங்கடேஷும் தயாரிப்பாளராக இணைந்திருக்கிறார். அதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ‘லிங்கா’ பட விநியோகஸ்தர்கள் மேலும் நஷ்டஈடு தரக் கேட்டு போராடுவதுடன், வழக்கும் ெதாடுத்திருக்கின்றனர். இனியும் நஷ்ட ஈடு தர இயலாது என்று வெங்கடேஷ் கூறியதாக கோலிவுட்டில் பேச்சு உள்ளது. பிரச்னை நீடிப்பதால் அடுத்து தமிழ் படம் தயாரிக்காமல் அவர் பாலிவுட்டில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

– dinakaran.com