ரஜினி நடிக்க கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியானது ‘லிங்கா’. இப்படத்தை தனது பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு தருவதாக ரஜினி அறிவித்தார். அதற்கேற்ப படம் ரிலீஸ் ஆனது. ஆனால் வசூல் ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டு போராட்டம் நடத்தினார்கள். குறிப்பிட்ட தொகையை ரஜினியும் அப்பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும் அளித்தனர். ஆனால் அந்த தொகை போதாது என்று இன்னமும் போராட்டம் தொடர்கிறது.
2 வருடத்துக்கு முன் நடிகர், நடிகைகளை நக்கலடிக்கும் விதமாக ‘தமிழ்படம்’ என்ற பெயரில் ஒரு சினிமா தயாரானது. காமெடிக்கு முக்கியத்துவம் தந்து இதன் ஸ்கிரிப்ட் அமைத்திருந்ததால் ரசிகர்களிடமும் ஓரளவுக்கு வரவேற்பு பெற்றது. அந்த பாணியில் ரஜினியின் ‘லிங்கா’ படத்தை கிண்டல் செய்யும் விதமாக விநியோகஸ்தர் சிங்காரவேலன், ஒரு படம் தயாரிக்க எண்ணி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனக்கு போட்டி ரஜினிதான் என்று ஒவ்வொரு பேட்டியிலும் கூறி வரும் பவர் ஸ்டார் சீனிவாசன் இதில் நடிக்க உள்ளார். இது ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
– dinakaran.com