சேரனின் சி2எச் திட்டம் என்னாச்சு? அதில் டெபாசிட் பண்ணியவர்களின் கதி என்னாச்சு? என்று உடனடியாக அலச வேண்டிய நேரம் வந்தாச்சு.
தனது ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை மட்டும் ரிலீஸ் பண்ணிவிட்டு ஒதுங்கிவிட்டார் அவர். ஒரே நாளில் பத்து லட்சம் சிடிகள் விற்பனை என்று அவர் தரப்பில் அறிக்கைகள் தரப்பட்டன. ஆனால் அவர் சொன்னதில் பத்து சதவீத சிடிகள் கூட விற்கவில்லையாம். அதுமட்டுமல்ல, இந்த நிறுவனம் தொடர்பான விளம்பர செலவுகள் , அது இது என்று ஏகப்பட்ட கணக்குகள் காட்டி விட்டாராம். நகையை விற்றெல்லாம் இந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்த பலரும், பணத்தை திருப்பிக் கேட்டு அலைந்து வருகிறார்கள். ஆனால் இதே திட்டத்தை இன்னும் சரியா செய்வேன். வெயிட் பண்ணுங்க என்கிறாராம் அவர். இன்னும் சரியான்னா? சேரன் மனசில் மிச்சமிருக்கிற பணத்திற்கும் ஏதேனும் திட்டமிருக்கோ என்னவோ?
-4tamilmedia.com