பாக்ஸ் ஆபிசில் பட்டையைக் கிளப்பும் பாபநாசம்

papanasamசென்னை: கமலின் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளிவந்த பாபநாசம் திரைப்படம், வசூலில் சாதனை படைத்திருகிறது. சமீப காலமாக தமிழ்ப் படங்கள் தடுமாறி வரும் வேளையில், எல்லாத் தடைகளையும் அடித்து நொறுக்கி விட்டு வசூலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது பாபநாசம்.

தமிழ்நாடு மற்றும் உலகமெங்கும் சேர்த்து சுமார் 750 திரை அரங்குகளில் படம் திரையிடப்பட்டிருந்தது, இதில் முதல் நாள் முடிவில் மட்டும் சுமார் 8 கோடி ரூபாயை படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வாரவிடுமுறை நாட்களான நேற்று(சனிக்கிழமை) மற்றும் இன்றைய வசூல் எவ்வளவு என்று நாளைக் காலையில் தான் தெரியவரும். இந்த இரு நாட்களின் வசூலும் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கமலின் நடிப்பில் ஆர்ப்பாட்டம் துளி கூட இன்றி வெளிவந்த பாபநாசம் வசூலில் பட்டையைக் கிளப்பி வருகிறது, குடும்பக் கதைகளின் மதிப்பை இன்னும் ஒருமுறை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த வெற்றி.

tamil.filmibeat.com

3 நாளில் 25 கோடியைத் தொட்டது பாபநாசம்

சென்னை: கமல்- கவுதமி நடிப்பில் கடந்த வரம் வெளிவந்த பாபநாசம் திரைப்படம் வசூலில் இதுவரை 25 கோடியைத் தாண்டியதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கமலின் நடிப்பில் பாபநாசமாக உருவெடுத்தது. எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியான பாபநாசம் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 750க்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

முதல் நாளில் மட்டும் சுமார் 8 கோடியை வசூலித்து சாதனை புரிந்த பாபநாசம் இந்த மூன்று நாளில் இதுவரை 25 கோடியைத் தாண்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 16 கோடியை பாபநாசம் வசூலித்து இருக்கிறது, நான்காவது நாளான இன்று 4 கோடி ரூபாய் வரை படம் வசூலிக்கலாம் என்று கூறுகிறார்கள்.

எனினும் நாளைக் காலையில் தான் படத்தின் மொத்த வசூல் நிலவரம் எவ்வளவு என்று சரியாகத் தெரியவரும். வசூலில் இதே வேகத்தில் சென்றால் 100 கோடி வசூலித்த படம் என்ற பெருமையை, பாபநாசம் தட்டிச்செல்லக்கூடும்.

tamil.filmibeat.com