சென்னை: கமல்ஹாசனின் பாபநாசம் வசூல் மழையில் குளித்துக் கொண்டுள்ளதாம். இதன் மூலப் படமான மோகன்லாலின் திரிஷ்யம் படம் மொத்தமாக வசூலித்த தொகையில் பாதியை திரைக்கு வந்த 3 நாளிலேயே பாபநாசம் வசூலித்து விட்டது. நல்ல கதையை மையமாக வைத்து கமல்ஹாசன் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட்டாகி விடும். பல படங்களை உதாரணமாக காட்டலாம். நல்ல கதையோடு, கமல்ஹாசனின் உயிரோட்டமான நடிப்பும் இணைந்து அந்தப் படத்தை வேறு தளத்திற்குக் கொண்டு போய் விடும். பாபநாசம் லேட்டஸ்ட் உதாரணம்.
வாயாரப் பாராட்டி வருகிறார்கள். மூலப் படமான திரிஷ்யத்தை விட மிகச் சிறப்பாக வந்திருப்பதாக பாராட்டுகிறார்கள். பல இடங்களில் மோகன்லாலை கமல்ஹாசன் மிஞ்சி விட்டார் என்ற பாராட்டுகளும் குவிகின்றன.
மோகன்லாலின் உடல் மொழியை பல இடங்களில் கமல்ஹாசனின் உடல் மொழி ஓவர் டேக் செய்வதையும் காண முடிவதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.
திரை விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வரும் அதே நேரத்தில் வசூலிலும் அசத்தி வருகிறது பாபநாசம். திரைக்கு வந்த 3 நாட்களில் இப்படம் ரூ 25 கோடி வசூலைத் தொட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றண.
சமீப காலத்தில் முதல் 3 நாட்களிலேயே ரூ. 25 கோடியைத் தொட்ட முதல் படம் என்ற பெருமையும் பாபநாசத்திற்குக் கிடைத்துள்ளது.
ஒரிஜினல் திரிஷ்யம் படம் திரைக்கு வந்த முதல் எட்டு நாட்களில் வெறும் 6.7 கோடியை மட்டுமே உலக அளவில் வசூலித்தது.
மேலும் 150 நாட்கள் ஓடிய திரிஷ்யத்தின் மொத்த வசூல் ரூ. 55 கோடியாகும். ஆனால் அதில் கிட்டத்தட்ட பாதியை இப்போதே வசூலித்து விட்டது பாபநாசம். பாபநாசம் தற்போது தொட்டுள்ள வசூலானது, திரிஷ்யம் 50 நாட்கள் கழித்துத் தொட்ட தொகையாகும்.
அமெரிக்காவில் இப்படம் ஜூலை 2ம் தேதி முதல் இதுவரை ரூ. 1.72 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
திரையிட்ட அனைத்து இடங்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக பாபநாசம் ஓடி வருவதால் வசூலும் அமோகமாகவே உள்ளது. இதே நிலை நீடித்தால் இப்படம் ரூ. 100 கோடியை வசூலிக்கலாம். அப்படி வசூலித்தால், எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் திரைக்கு வந்து 100 கோடியை வசூலித்த முதல் கமல் படம் என்ற பெருமை இதற்குக் கிடைக்கும்.
கமல்ஹாசன் அமைதியில் ஒரு வெற்றி.
Body.Language. அதுக்கு தமிழில் ” உடல் மொழி ” அட என்னமா தமிழ் படுத்தி இருக்கிறீர்கள். ஆனால் எடுபட வில்லை
செம்பருத்தி ஆரியர்களின் தமிழ்மொழி கொலைவெறிய அப்படியே வாந்தி எடுக்கிறார்கள் !!
இங்கும் தமிழ் மொழி உடகம்களில் தமிழரல்லாதார் அதிகமாக உருவாக்கபடுகிறார்கள் !! தமிழை வளர்க்கத்தான் !
Google ஆண்டவர் கொடுத்த மொழி பெயர்ப்போ?.
சிவாஜிக்கு அடுத்து ஒரு சிறந்த நடிகர் கமல்ஹாசன்.
மோகன்லால் ஒரு மழை,கமல் ஒரு எவரெஸ்ட்,உலகநாயகன்.