எம்.எஸ். விஸ்வநாதன் தொடர்ந்து கவலைக்கிடம்

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் (87) தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நேற்று மாற்றப்பட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில நாள்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் சென்னை, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

அவரை மருத்துவமனைக்குச் சென்று இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட திரையுலகினர் நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அவரது உடல்நிலை திடீரென மீண்டும் மோசமானது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

-www.dinamani.com