நகைச்சுவை கதையில் மீண்டும் கமல்

kamalஇயக்குனர் லிங்குசாமி பட நிறுவனம் தயாரிப்பில் உருவானது ‘உத்தம வில்லன்’. கமல், ஆண்ட்ரியா, பூஜாகுமார் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்தனர். கடும் நிதி நெருக்கடியில் சிக்கினார் லிங்குசாமி.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ்நடிக்கும் ‘ரஜினி முருகன்’ படத்தை தயாரித்து முடித்திருக்கிறார் லிங்குசாமி. அப்படம் வெளியிடுவதில் சிக்கில் நீடிக்கிறது. சொத்தை விற்றாவது படத்தை ரிலீஸ் செய்வேன் என லிங்குசாமி படத்தின் ஆடியோ, டிரைலர் வெளியீட்டின்போது தெரிவித்தார்.

இந்நிலையில் லிங்குசாமிக்கு புதிய படத்தில் நடித்து கொடுக்க கமல் முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி லிங்குசாமி தரப்பில்கேட்டபோது,‘தூங்காவனம் படத்தில் கமல் தற்போது நடித்து வருகிறார்.

அப்படம் முடிந்தவுடன் லிங்குசாமி நிறுவனத்துக்கு புதிய படம் நடித்துக்கொடுப்பதாக கமல் தெரிவித்துள்ளார். இது காமெடி பின்னணியிலான படமாக இருக்கும். மைக்கேல் மதன காமராஜன், பேசும்படம் உள்ளிட்ட கமல் நடித்த படங்களை இயக்கிய சிங்கீதம் சீனிவாசராவ் இப்படத்தை இயக்க பேச்சு வார்த்தை நடக்கிறது’ என்றனர்.

– cinema.dinakaran.com