சென்னை: பாகுபலி திரைப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்திய சினிமா வரலாற்றில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் பாகுபலி, கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகியுள்ளது.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி உட்பட பல மொழிகளில் ரிலீசாகி பட்டையை கிளப்பிவருகிறது இத்திரைப்படம். இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஸ்டூடியோ நிறுவனம், பாகுபலியை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாம்.
இந்த தகவல், படத்தின் இயக்குநர் ராஜமவுலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இருப்பினும், இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
பாகுபலி வெற்றியால், சல்மான்கான் நடித்து இவ்வார இறுதியில் வெளியாக உள்ள பஜ்ரங்கிபைஜான் திரைப்படத்தின் வினியோகஸ்தர்களும் கலக்கத்தில் உள்ளனர்.
வாழ்த்துகள் ராஜமௌலி சார்! பிரமாண்டம் ஷங்கர் சாரையே திகைக்க வைத்து விட்டீர்கள்! இந்திய சினிமா உலகில் உங்களுக்கும் ஷங்கருக்கும் தான் வருங்காலத்தில் போட்டி இருக்கும் போல் தோன்றுகிறது! வருங்காலத்தில் இன்னும் சிறப்பான படங்களைக் கொடுப்பீர்கள் என நம்புகிறேன்! ஆமாம்! பாகுபலி என்றால் என்ன?
காக்க முட்டைபோல் வருமா ?
எதோ புராண கதையாம் …