இதுவரை கேட்டதெல்லாம் ஓ.கே. ஆனால் இதுதான் கொஞ்சம் ஓவர்’ என்று முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டது உலகம்.
நெட்டர்களின் புலம்பல், விமர்சனம், தாக்குதல், சமயங்களில் சப்போட்ஸ்… எல்லாமே இளையராஜாவை நோக்கிதான் கடந்த சில தினங்களாக. என்னவாம்? தமிழகத்தில் குட்டி மேடைகள், கோவில் திருவிழாக்கள், காது குத்து, கல்யாணம்களில் பாடி வரும் மேடை இசைக்கலைஞர்களை அழைத்த இளையராஜா, ‘இனியும் கூட என் பாடல்களை தாராளமா பாடுங்க. ஆனால் எனக்கு வருஷத்துக்கு ஒரு அமவுன்ட்டை கொடுத்துட்டு பாடுங்க’ என்று அன்போடு கேட்டுக் கொண்டிருக்கிறார். மேடைக்கலைஞர்கள் ஷாக் ஆனது போலவே, உலகத் தமிழர்களும் ஷாக்காகி இருக்கிறார்கள். ‘இதே பாணியை எத்தனையே அற்புதங்களை நிகழ்த்திய கேவி.மகாதேவனோ, எம்.எஸ்.வியோ, தேவாவோ, சங்கர் கணேஷோ செய்யவில்லை. இவர் மட்டும் ஏன்?’ என்கிறார்கள். படைச்சவரு கேட்கிறாரு. பயன்படுத்துவறங்க கொடுக்கிறாங்க. இடையில் நமக்கென்ன பாஸ்?
-http://www.4tamilmedia.com
இவரும் ஒரு காலக் கட்டத்தில் “சாப்பாட்டுக்கு லாட்டரி” அடித்துக் கொண்டிருந்த போது மற்றவர்கள் இசை அமைத்த பாடல்களை மேடையில் பாடியவர் தானே! இன்று நல்ல நிலையில் வாழும் இவர் அன்று அவர் பாடியதற்காக அந்த இசையமைப்பாளர் குடும்பக்களுக்கு நஷ்ட ஈடு தரலாமே!
தமிழன் டா
படைச்சவரு இரசிகர்களின் மீது இருந்த கருணையால் படைச்சார அல்லது படைச்சவரையே போற்ற வேண்டும் என்று படைச்சாரா? இப்படி கேட்பதில் நியாயம் இருக்கு. பொது நலமா அல்லது சுயநலமா?. பொது நலம் என்றால் காசு வேண்டாம் என்று மாசு இல்லாமல் வாழலாம். சுயநலம் என்றால் காசு பெற்றுக் கொண்டு மாண்பு இல்லாத வாழ்க்கை வாழலாம். படைச்சவருக்குத் எது தேவையோ அதை அவரே தேர்ந்து எடுத்துக்கட்டும். காசா மாசா?
.
கஷ்டப்பட்டு ராஜ இசை அமைப்பார். ஒசியோலே மத்தவங்க லாபம் சம்பாதிப்பார்கள் … இது என்ன ஞாயம் ? பொது நலம் பேசுருவங்க வேணும்னா அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதில் மத்தவங்களுக்கு கொடுக்கலாமே….
சுயநலம் பேசுவோருக்கு “இசை ஞானி” என்ற பட்டத்தைக் கொடுத்த மடையன் யாரு?
பேச்சில் ஆன்மிகம் தெரிகிறது .ஆனால் செயலில் அதை காணோம்
ஒருவன் தென்னை நாடுகிறான் அது தனக்கு வளர்ந்து பயன் தரும் என்று சுயனலதீர்க்ககவா ?நாளை யாரவது பயன் அடையட்டும் என்ற பொதுநலத்துடன் தானே பேராசை பெரும் நஷ்டம் சில்லறை தனமான புத்தி!
பட்டம் என்பது பிரதி பலன் எதிர்பாராமல் மக்களுக்கு செய்த பணியை மெச்சிக் கொடுப்பது. பிரதி பலன் எதிர்பார்த்து இசைத் துறைக்கு செய்யும் தொண்டிற்கு எதற்கு பட்டம்?. ஆன்மீகத்தை அதன் வழியே சொல்ல வேண்டுமானால் அதனுள் நிற்போரிடம் அதற்கு தகுந்தவாறு எடுத்துச் சொல்ல முடியும். அதனால்தான் ஆன்மீகத்தில் உள்ளதை எடுத்துச் சொல்லிப் அதில் பக்குவப் படாதவருக்கு புரியும் வண்ணம் இடித்துரைப்பது. இது ‘two in one shampoo’ போல. பழைய யுக்தி இக்காலத்தில் பயன்படாமல் போய் விட்டதால். இந்த புதிய யுக்தி. புரிஞ்சுகிட்டா சரி.