மாரி படத்தில் அதிகமான புகைபிடிக்கும் காட்சிகள் – மக்கள் மத்தியில் அதிகரிக்கும் எதிர்ப்புகள்

Maariசென்னை: தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் மாரி திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 325 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அண்டை நாடான இலங்கையிலும் சுமார் 16 திரையரங்குகளில் மாரி திரைப்படம் வெளியானது.

இன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்திற்கு தற்போது இலங்கை மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து உள்ளது, குறிப்பாக இளைஞர்கள் தனுஷிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்திற்கு அவர்கள் சொல்லும் காரணம் இதுதான், ” படம் முழுவதுமே தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகளே உள்ளன. புகையிலையை ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில் ஒருபடம் முழுவதுமே புகை பிடிப்பது போன்று தனுஷ் நடித்திருப்பது கண்டிக்கத்தக்கது. எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவே இந்தப் போராட்டம் என்று கூறியுள்ளனர்.

இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக நடிகர் தனுஷின் படத்திற்கு அவர்கள் செருப்பு மாலை அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

இதுதொடர்பாக தனுஷிடம் கேட்டதற்கு ” மாரி படத்தில் நான் ஒரு லோக்கல் தாதாவாக நடித்து இருக்கிறேன், அதனால் தான் படம் முழுவதும் புகை பிடிக்கும்படி காட்சிகள் உள்ளன. இயக்குனர்களின் கதையில் நான் தலையிட முடியாது, அதே நேரம் எனது சொந்த வாழ்க்கையில் நான் புகைபிடிப்பது கிடையாது” என்று கூறியிருக்கிறார். சொல்வதற்கு ஒன்றும் இல்லை…

tamil.filmibeat.com