நடிகர் ரஜினிகாந்த் வழியில் திரைப்படங்களில் புகைப் பிடிப்பதை தனுஷ் கைவிட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக தனுஷுக்கு அன்புமணி ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள கடிதம்:
மாரி திரைப்படத்தின் ஏராளமான காட்சிகளில் நீங்கள் (தனுஷ்) புகைப் பிடித்தபடி நடித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
உலகில் மிக அதிகமானோரைக் கொல்லும் மிகப்பெரிய தீமை புகையிலைதான். புகையிலைப் பொருள்களால் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் இறக்கின்றனர். இந்தத் தீமையால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உரிய வயதாகும் முன்பே இறக்கின்றனர்.
இளைஞர்களிடையே புகைப் பிடிக்கும் பழக்கம் அதிகரிப்பதற்கு திரைப்படங்களில் இடம்பெரும் புகைப் பிடிக்கும் காட்சிகள் முக்கியக் காரணமாக உள்ளன. நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்டவர்கள் திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என வாக்குறுதி அளித்து, அதை உறுதியாகப் பின்பற்றி வருகின்றனர்.
உங்கள் மாமனார் நடிகர் ரஜினிகாந்த், திரைப்படங்களில் புகைப் பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளதுடன், தனது ரசிகர்கள் புகைப் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில், திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் உங்களது செயல், ரஜினிகாந்த் புகழுக்கு இழுக்கு செய்வதாக அமையும். எனவே, திரைப்படங்களில் புகைப்பிடிப்பதைக் கைவிடுங்கள். அதைப் பகிரங்கமாகவும் அறிவியுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
-http://www.dinamani.com
சரிடா தம்பி ,நீ முதலில் ஜாதி கட்சி நடத்துவதை கை விடு பிறகு ,ஊருக்கு உபதேசம் பண்ணலாம்