சென்னை: பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் வேண்டுகோளை உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளார் நடிகர் தனுஷ்.
இனிமேல் சினிமாவில் தான் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றும, நிஜத்தில் தனக்கு புகை பிடிக்கும் பழக்கமே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வரும் நடிகர் தனுஷின் சமீப கால படங்களில் அவர் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் அதிகரித்து வந்தன.
அதிலும் லேட்டஸ்டாக வந்த மாரி படத்தில் சரமாரியாக அவர் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. தியேட்டரில் படம் பார்த்தவர்களுக்கே மூச்சு முட்டிப் போகும் அளவுக்கு சிகரெட் புகை படத்தில் ஓவராகவே இருந்தது.
இதைக் குறிப்பிட்டு டாக்டர் அன்புமணி, தனுஷுக்கு கடிதம் எழுதியிருந்தார். உங்களது மாமனார் ரஜினிகாந்த் கூட புகைபிடிப்பதை விட்டு விட்டார். மாமனார் என்பவர் அப்பாவுக்குச் சமம். மாமனாருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று அன்புடன் கோரியிருந்தார் அன்புமணி.
இதை உடனடியாக ஏற்றுள்ளார் தனுஷ். கடிதத்திற்கு பதில் அளித்துள்ள தனுஷ், உண்மையில் எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் கிடையாது. மாரி படத்தில் தாதா கேரக்டருக்காக இயக்குநர் வலியுறுத்தியதால் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்தேன்.
இனிமேல் என் படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெறாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அன்புக்குரிய அன்புமணி ராமதாசுக்கும் இந்த அறிக்கை மூலம் உறுதி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.
அடே சின்னப்பயலே ,சிகிறேட்டு பிடிக்கும் காட்சி உனக்கு பொருந்தவே இல்லை ,,உன் உடம்புக்கு சூட்டாகவில்லை ,இனியும் சிகரெட் போன்ற கட்சிகளில் நடிக்காதே தம்பி ,,டேய் அன்பு மணி முதலில் ஜாதி கட்சியை ஒலித்து கட்டு ,நீயும் உங்க அப்பனும் ஜாதி கட்சி நடத்தி என்னதே சாதிக்க போறேங்க ? அதுக்கு அதுக்கு சிகரெட் கட்சிகள் எவ்வளவோ ப்ராவவில்லை .அந்த காலத்திலே சிவாஜி கணேசன் படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் அதிக மாக வே நடிதிரிக்கிறார் .
தம் அடிப்பது மட்டுமல்ல. தண்ணி அடிப்பது. அரிவாளைத் தூக்குவது. வன்முறை இவைகளுக்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். தனுஷ் தன் படங்களில் இவைகளையும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாழ்த்துகள்!
மாரியை ரசிக்கும் இளையோர்கள் எதிர்காலம் நாறி போகும் ! கவனம் ! கண்ட குப்பைகள் எல்லாம் திரை அரங்குகளில் ஒளிபரப்புவதை கேட்க மலேசியாவில் நாதி இல்லையா? வேதனை !
முடிந்தால் மது பானம் தவிர்க்க வேண்டும் .
மது ஒரு இந்து கலாசாரம் ஆகிவிடும் போல் இருக்கிறது .
மாரியை ரசிக்கும் இளையோர்கள் எதிர்காலம் நாறி போகும் ! இதாவது பரவாவில்லை !? நம் நாட்டு தலைவர்கள் ,700 USD உழல ,ALTHAAN துயா கொலை ,பொய் பித்தலாட்டம் ,நிஜ வாழ்க்கையிலேயே நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் ,சிநிமாய் பார்த்தாவது பிறகு பிறரின் அறிவுரை படி திருத்திக்கொள்ளலாம் ,ஆனால் இந்த நாறிப்போன தலைவர்களை பின் பற்றினால் ,இன்றைய தலைவர் நாளைய திருடர்கலாகதான் ஆகா வேண்டி இருக்கும் ,ஜாக்கிரதை ,சினி 2 மணி நேரம் முடிந்துவிடும் ஆனால் நாட்டின் தலைவர்களில் முல்லா மாறி தனங்கள் காலம் காலம் தொடரும் அதற்க்கு மாறி எவ்வளவோ மேல் .
மோகன், சரியாகச் சொன்னீர்கள். நமது சமுதாயத்தில் அரசியல்வாதிகள் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பதும். குண்டர் கும்பல் தழைத்து ஓங்கவும் நமது தானைத் தலைவர் தானே காரணம்!
மடயனே நீ என்ன அடித்தால் எங்களுக்கு சொல்ல தேவையில்லை உன்னை போன்ற நாதேறி நடித்த படத்தை பார்க்க மக்களுக்கு என்ன கேடா