தாமஸ் கிண்ணம் – பூப்பந்து விளையாட்டில் ஒரு முக்கியமான போட்டி

[தொகுப்பு : தானப்பன்]

தாமஸ் கிண்ணம் என்பது பூப்பந்து விளையாட்டில் ஒரு முக்கியமான போட்டி விளையாட்டு. இந்த தாமஸ் கிண்ண போட்டி இரண்டாடுக்கு ஒருமுறை நடைபெறும் போட்டியாகும். தாமஸ் கிண்ணத்தை அனைத்துலக பூப்பந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் சர் ஜார்ஜ் ஆலன் தோமஸ் 1939-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

தாமஸ் கிண்ண போட்டி 1948-1949-ல் தொடங்கப்பட்டது. தொடக்கத்திலிருந்து 1982 வரை இப்போட்டி மூன்றாண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டது. 1984 முதல் இன்றுவரை இரண்டாண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஒன்பது ஆட்டங்களாக இருந்ததை ஐந்து ஆட்டங்களாக விளையாடினர்.

தாமஸ் கிண்ண போட்டி ஆண்களுக்கு மட்டுமே. இப்போட்டியில் ஒவ்வொரு நாடும் தன் ஒரு குழுவில் மூன்று ஒற்றையர் இரண்டு இரட்டையர் கலந்து கொண்டு விளையாடுவர். எந்த நாடு இறுதியாட்டத்தில் மூன்று ஆட்டத்தில் வெற்றிப் பெற்றார்களோ அந்த குழுவே தாமஸ் கிண்ண வெற்றியாளராக தேர்வு பெறுகிறது.

முதன் முதலில் 1949-ல் மலாயா (இப்போதைய மலேசியா) இறுதியாட்டத்தில் 8-1 என்ற ஆட்டக்கணக்கில் டென்மார்க்கை தோற்கடித்தது.

இந்த தாமஸ் கிண்ணத்தை சீனா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் மட்டுமே வென்றுவுள்ளது. இந்தோனேசியா 13, சீனா 8,  மலேசியா 5 தடவைகள் தாமஸ் கிண்ணத்தை வென்றுவுள்ளது. சீனா நடப்பு வெற்றியாளராக உள்ளது.