சிறுவர்கள், புதுமுகங்களை வைத்து சிறுபட்ஜெட்டில் சென்னை 28 படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு. ரஜினி முதல் பாராட்டாத நடிகர்களே இல்லை. ஒரே இரவில் தேடப்படும் இயக்குனர் ஆனார்.
அடுத்து இயக்கிய ‘சரோஜா’ படமும் கைதூக்கிவிட்டது. 3 வது படத்திலேயே அவரது சம்பளம் கோடியை தொட்டது. ரஜினியின் மகள் சவுந்தர்யா தயாரித்த ‘கோவா’ படத்தை இயக்கினார். இது அவருக்கு கைகொடுக்கும் படமாக அமையவில்லை.ஆனாலும் அஜீத், சூர்யா, கார்த்தி படங்களை இயக்க வாய்ப்பு தேடி வந்தது. மங்காத்தா, மாஸ், பிரியாணி படங்களை இயக்கினார்.
இதில் மங்காத்தா ஓரளவுக்கு பெயரை காப்பாற்றியது. மற்ற 2 படங்களும் எதிர்பார்த்தளவுக்கு வெற்றி பெறவில்லை. இது அவருக்கு சறுக்கலாக அமைந்தது. ‘ஹீரோக்கள் மாறினாலும் நட்பு நடிகர்களை மறக்காமல் குறிப்பாக பிரேம்ஜியை ஒவ்வொரு படத்திலும் வெங்கட் பிரபு இணைத்துக்கொள்வதை கோலிவுட்டில் சிலர் விமர்சிக்கின்றனர்.
தவிர ஆங்கில படங்களை தழுவி இவரது கதைகள் அமைக்கப்படுகின்றன என்ற இணைய தள வாசகர்களின் விமர்சனமும் வெங்கட் பிரபுவுக்கு சாதகமாக இல்லை. நண்பர்களிடம் சிரித்துபேசி ஜாலியாக இருக்கும் வெங்கட் தன்னையோ படத்தையோ விமர்சிக்கும் இணையதள ரசிகர்களுக்கு கோபமாக பதில் அளித்து அவர்களை அரவணைக்க தவறிவிடுவதும் ஆரம்பகால படங்களில் இவர் பெற்ற வரவேற்பை இழப்பதற்கு காரணமாகி விடுகிறதாம்.
பெரிய நடிகர்களிடமிருந்து அழைப்பு இல்லாததால் தற்போது சத்தமில்லாமல் சிறுபட்ஜெட்டில் ஒரு படம் இயக்கி வருகிறார்.
– dinakaran.com
கோவிந்தா கோவிந்தா தான்
வெற்றி தோல்வி! வெற்றி தோல்வி! இது தான் வாழ்க்கை. இன்றைய தோல்வி நாளைய வெற்றி. இளம் வயதினர் தானே. வெற்றி பெறுவார். திறமையானவர். வெற்றி பெற வாழ்த்துக்கள்!