ஹிந்தி திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ஸ்ரீதேவி. தமிழக மக்களால் அழகுமயில் என அழைத்து ரசிக்கப்பட்ட சிறந்த ஒரு நடிகையாக தமிழ்ப்படங்களில்தான் வலம் வந்தவர். பிறகு, கோலிவுட்டை மறந்துவிட்டு பாலிவுட்டுக்கு பறந்துவிட்டது அந்த கோல மயில்.
பாலிவுட்டுக்கு போன பிறகு தனது குண்டு மூக்கை ஒரு குறையாக கருதி ப்ளாஸ்டிக் சர்ஜரியும் செய்துகொண்டார்.
ஹிந்தி படவுலகில் தனது அழகாலும் நடிப்பாலும் உச்சத்தையே தொட்டார். மும்பை வாலாக்கள் ஸ்ரீதேவியின் தற்போதைய முகத்தை வியந்து ரசித்தாலும், அந்த குண்டு மூக்கோடு தமிழ்ப் படங்களில் இருந்த அழகு தான் மனங்களில் அழுத்தமாய் பதிகிறது என்பதும் பல ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பிரபல ஆங்கில ஊடகம் நடத்திய வாக்கெடுப்பில், இந்த 100 ஆண்டுகளில் இந்தியாவில் சிறந்த நடிகையாக முதல் இடத்தில் ஸ்ரீதேவியை தேர்வு செய்திருந்தனர்.
அவர் அதிக அளவிலான ரசிகர்களால் வெகுவாக ஈர்க்கப்பட்ட இந்திய நாயகி என்பதுக்கு இதைவிட வேறு என்ன தகுதி இருக்க முடியும்.
1963 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள சிவகாசியில் பிறந்தார். ஸ்ரீ அம்மா யங்கர் அய்யப்பன் என்ற பெயருடைய ஸ்ரீதேவி துணைவன் என்ற பக்திப் படத்தில் குழந்தை முருகன் வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
1975 ல் ஜூலி என்ற இந்தி படத்தில் கதாநாயகி லட்சுமியின் கடைசி தங்கையாக ஸ்ரீதேவியின் நடிப்பு பேசப்பட்டதால், அதுவே பாலிவுட்டுக்கு பிள்ளையார் சுழியானது.
1975 ல் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி, 1976 ல் தனது 13 வது வயதில் மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
நடிகைகள் வயதை குறைத்து சொல்வதுதான் வழக்கம் ஆனால், தனது 14வது வயதில் தான் ஸ்ரீதேவி 16 வயதினிலே படத்தில் நடித்தார். அடுத்தடுத்து சிகப்பு ரோஜாக்கள், மூன்றாம்பிறை, போக்கிரிராஜா, சந்திப்பு என கமல், ரஜினி, சிவாஜியோடும் ஜோடியாக நிறைய வெற்றிப்படங்களில் நடித்தார்.
அதிலும், கமல், ஸ்ரீதேவி ஜோடி தமிழ் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பிறகு மும்பை சென்ற ஸ்ரீதேவி.
ஹிந்தியில் அமிதாப்பச்சன் போன்ற முன்னணி ஹீரோக்களோடு நடித்தார். ஹிம்மத்வாலா, மாவாளி, கர்மா, மிஸ்டர் இண்டியா போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்து புகழடைந்தார்.
இந்திய அரசின் உயர்வான பத்மஸ்ரீ விருதும் 5 முறை பிலிம்பேர் விருதும் இன்னும் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
ஸ்ரீதேவி 1996 ல் போனிகபூரை மணந்தார். அதன்பிறகு சினிமாவிலிருந்து 15 வருடங்கள் விலகியிருந்தார். பிறகு, மீண்டும் 2012ல் இங்லீஷ் விங்லீஷ் படத்தில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை மீண்டும் பெற்றது, அந்த படத்தின் வெற்றியிலேயே தெரிந்தது. பாலிவுட்டில் அதுவரை, 15 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு வந்து, நடித்து ஜெயித்த நடிகை இல்லை.
ஸ்ரீதேவி மும்பை சென்ற பிறகு, 1980 களில் சூப்பர் ஸ்டார் ரஜினியோடு நான் அடிமை இல்லை என்ற படத்தில் நடித்தார்.
அதன்பிறகு, தற்போதுதான் வளரும் படமான ’புலி’ என்ற விஜய் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய இந்த பிறந்த நாளில் வாழ்த்து சொல்வதோடு இன்னும் நிறைய தமிழ்ப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழ் ரசிகர்கள் சார்பில் வைப்போம்.
-http://www.cineulagam.com
ஒரு தமிழ் பெண் ,,நினைக்கையிலேயே ,உடம்பெல்லாம் புல்லரிக்கிறது ,தமிழச்சி என்றாலே சாதனைதான்
ஹிஹிஹிஹி…! அவர் தெலுகுப் பெண்ணப்பா! தமிழ்ப்பறை கோபித்துக்கொள்ளப் போகிறார்! தேனி கொட்டப் போகிறார்!
ஆபிரகாம் தாங்கள் என்னைத் தவறாக புரிந்துக் கொண்டுள்ளீர்கள். எனக்கு ஓய்வான நேரத்தில் மனதிற்கு இதமாக கேட்பது தமிழ் சினிமாவின் பழம் பாடல்களையே. பழைய தமிழ் படங்களைப் பார்ப்பதும் எனக்கு பிடித்தமான பொழுது போக்கு. அதில் இந்த குயிலும் கமலஹாசனும் சேர்ந்து நடித்த படங்களில் வரும் சில பாடல்களும் பிடிக்கும்.