இசை அமைப்பாளர் இளையராஜா (73) நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இளையராஜாவுக்கு வெள்ளிக்கிழமை இரவு மார்பில் வலியுடன் அசௌகரிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். இருதய தீவிர சிகிச்சைப் பிரிவில் அவரை அனுமதித்து, ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும் அவர் தற்போது நலமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இளையராஜாவுக்கு இருதய சிகிச்சை மீண்டும் தேவையா என்பது குறித்து ஓரிரு நாள்களில் முடிவு செய்யப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்… பிரசாத் ஸ்டுடியோவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2013-ஆம் ஆண்டு) பாடல் இசை அமைப்பில் இளையராஜா ஈடுபட்டபோது, அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. அப்போது அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, இருதய ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இருதய ஆஞ்சியோ பிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சையை இளையராஜா செய்து கொண்டு 5 நாள்களில் அப்போது வீடு திரும்பினார்.
-http://www.dinamani.com