தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் ஒரு படத்திற்கு ஓப்பனிங் வேண்டும் என்றால் அது பெரிய நடிகர்களின் படங்களாக இருக்க வேண்டும். இல்லையென்றால் யாராவது முன்னணி தயாரிப்பாளர் படத்தை வாங்கி நல்ல முறையில் Promotion செய்தால் தான் உண்டு.
அந்த வகையில் தொடர்ந்து நல்ல படங்களாக வெளியீட்டு வரும் திருப்பதி பிரதர்ஸின் அடுத்த வெளியீடு தான் இந்த ஜிகினா. விஜய் வசந்த் நடிப்பில் ரவி நந்தா பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.
கதைக்களம்
தமிழ் சினிமாவையும் காதலையும் பிரிக்கவே முடியாது, அதேபோல் இன்றைய Trend இளைஞர்களையும் பேஸ்புக்கையும் பிரிக்க முடியுமா? இவை இரண்டையும் இணைத்து ஒரு கதை செய்யலாம் என்று ரவி நந்தா பேஸ்புக் காதலை கையில் எடுத்துள்ளார்.
பேஸ்புக்கில் ஆண்கள் என்றால் சூர்யா, துல்கர் புகைப்படங்கள், பெண்கள் என்றால் சமந்தா, நஸ்ரியா புகைப்படங்கள். இப்படி முகத்தை மறைத்து காதலித்தால் விளைவு என்ன? இது தான் கதைச்சுருக்கம்.
தன் அம்மா இறந்த பிறகு விஜய் வசந்த் தன் நிறம், அழகு, தகுதி அனைத்தையும் நினைத்து நம்மை யார் காதலிப்பார்கள் என்று வருத்தப்பட, அவரின் நண்பர்கள் பேஸ்புக்கில் வேறு ஒருவரின் புகைப்படத்தை வைத்து பெண்களிடம் பேச சொல்கின்றனர்.
விஜய் வசந்திற்கு இதன் மூலம் ஒரு அழகான பெண் கிடைக்க, வாழ்க்கை சந்தோஷமாக செல்கின்றது. அதே பெண்ணை யதார்த்தமாக விஜய் வசந்த் சந்தித்து பழகும் வாய்ப்பு கிடைக்கின்றது, நல்ல நட்பில் எப்படி காதலை சொல்வது என்று தவிக்கின்றார்.
எப்படியாவது ‘நான் தான் உங்களிடன் பேஸ்புக்கில் பேசியது, இது தான் என் நிஜ உருவம்’ என சொல்ல வரும் தருணத்தில் பல சுவரசியமான முடிச்சுகள் உடைய மிகவும் உணர்ச்சிப்பூர்வமான முடிவை ஜாலியாக கூறியிருக்கிறார் ரவி நந்தா பெரியசாமி.
படத்தை பற்றிய அலசல்
விஜய் வசந்த் தன் தாழ்வு மனப்பான்மையால் நடிக்கும் ஒவ்வொரு காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார். தன் காதலை எப்படி சொல்ல வேண்டும் என்று அவர் தவிக்கும் காட்சிகளில் செம்ம ஸ்கோர் செய்கிறார்.
ஹீரோயின் சானியா தாராவும் நிறைவான நடிப்பை தந்தாலும், படத்தில் டுவிஸ்ட்டாக வரும் அந்த ஹீரோயினின் நடிப்பு செம்ம யதார்த்தம்.
காதலுக்கு ஏது கலர்? இரு மனம் புரிந்துகொண்டால் போதும் என்பதை ஆழமாகவும், அழுத்தமாகவும் கூறியிருக்கிறார் ரவி நந்தா பெரியசாமி. ஜான் பீட்டர் இசையில் அடிக்கடி வரும் அந்த மெலடி பாடல் தாளம் போட வைக்கின்றது.
-http://www.cineulagam.com
ஒரு கதைக்கு
தேவையான
நல்ல
விமர்சனம்
அருமை அருமை