இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. விவசாயிகள் தற்கொலை என்பது அன்றாடம் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது.
இந்த பிரச்சனையை அடிப்படையாக கொண்டு ஒரு அற்புதமான குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மழை இல்லாததால் காய்ந்து கிடக்கும் வயலை பார்த்து கவலையுடன் இருக்கிறார் ஒரு விவசாயி. அவரின் செல்ல மகள், தனது அப்பாவைப் பின் தொடர்ந்தபடியே இருக்கிறாள். காரணம், மற்ற விவசாயிகளைப் போல தனது அப்பாவும் தற்கொலை செய்து கொள்வாரோ என்கிற பயம்தான். இரவில் கூட தந்தையை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்காமல் நட்சத்திரங்களை எண்ணியபடி இருக்கிறாள். மேலும் வீட்டில் இருக்கும் ஒரு கயிற்றை அப்பாவுக்கு தெரியாமல் மறைத்து வைக்கிறாள்.
ஒரு நாள் காலை அந்த கயிற்றை காணவில்லை. மிகவும் பதற்றத்துடன் சிறுமி தந்தையை தேடி வயலை நோக்கி ஓடுகிறாள். அடுத்து என்ன நடக்கிறது என்பதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்…
-http://tamil24news.com
மனிதன் மனது வைத்தால், பாலைவனத்திலும் வாழமுடியும் இந்த பாழாய் போன அரசியல்வாதிகல் இல்லாதிருந்தால். இங்கே இருக்கும் விவசாயின் நலனை மறந்து விட்டு, செவ்வாய் கிரகத்தில் விவசாய நிலம் தேடப்போனால் இதுதான் நடக்கும். இங்கே மட்டும் என்ன வாழுதாம் இதுதானே வளருது.
இந்தியர்கள் இப்போதும் உலக அறிவில்லாமல் இருக்கின்றனர்- அவர்களின் பத்தாம் பசலித்தனமும் பகுத்தரிவின்மையும் ஜாதி பித்தும் சகிக்கமுடியவில்லை. விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா என்ற நிகழ்ச்சியை பார்த்தால் இவர்களின் மட்டரக எண்ணங்கள் புரியும் –இந் நிலையில் எப்படி ஒழுங்கு என்பது புரியும்? தமிழ் படங்களில் அங்கு யாருக்கும் சட்டம் என்ன என்பதே தெரிய வில்லை போலும் அதிலும் காவல் என்றாலே நம்ப முடியாத ஈன ஜென்மங்கள் போல் சித்தரிக்கின்றார்கள் — அதிலும் TIMES NOW -என்ற ஆங்கில இந்திய தொலைக்காட்சியிலும் இதையே பேசினாலும் பலன் இல்லை. அதில் பங்கு எடுக்கும் பெரும்பாலோருக்கு புத்தி எங்கு இருக்கிறது என்றே புரியவில்லை–
நாட்டை ஆளுவற்கு நல்ல மனிதர்கள் தேவை. தமிழ் நாட்டில் அந்த மனிதம் காமராசரிடம் இருந்தது. இப்போது உள்ளவர்களிடம் மனிதமும் இல்லை; சூடும் இல்லை; சொரணையும் இல்லை! வெக்கம் கெட்ட ஜென்மங்கள். அதன் விளைவு மக்கள் கஷ்டப்படுகின்றனர்.