ஸ்ரேயாவுக்கு ஏன் முக்கியத்துவம்.. மலையாளிகளைப் பாட வைக்கலாமே? கேட்கிறார் சித்ரா

shreya-ghoshalதிருவனந்தபுரம்: மலையாள இசையமைப்பாளர்கள் பலரும் ஸ்ரேயா கோஷலுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்று பிரபல பின்னணிப் பாடகி சித்ரா கேட்டுள்ளார். ஸ்ரேயா சிறந்த பாடகி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் மலையாளத்தில் நன்றாக பாடக்கூடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்களே என்று கூறியுள்ளார் சித்ரா. சினிமா உலகில் நடிகைகள் இடையே மட்டும் போட்டியில்லை பாடகிகள் இடையேயும் போட்டி இருக்கத்தான் செய்கிறது. இன்றைய கால கட்டத்தில் ஏராளமான இசையமைப்பாளர்களும், பாடகர்களும் பாடகிகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் ஒருசிலர் காட்டில் மட்டுமே அடைமழை கொட்டுகிறது. இளைய தலைமுறையினருக்கு வழிவிட்டு சில பாடகர்களும் பாடகிகளும் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவர்களாகிவிட்டனர்.

இந்தியாவின் பிரபல பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல் தமிழ், ஹிந்தி மலையாளம் உட்பட பல இந்திய மொழிகள் பல பாடல்களை பாடியிருக்கிறார்.

மெலடி குயின் என்ற பட்டத்திற்கு சொந்தமானவர் ஸ்ரேயா. இவரது ரம்மியமான குரலுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதிக சம்பளம் பெறும் பாடகிகளின் பட்டியலில் ஸ்ரேயா கோஷலுக்கு எப்போதும் இடமுண்டு.

தமிழில் மட்டும் இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் பாடியிருக்கிறார். இவர் பாடும் பாடல்கள் அனைத்துமே தமிழில் ஹிட்டாகியுள்ளன.

மலையாள தேசத்தில் ஸ்ரோயா கோஷலின் குரலுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். இதனால் இசையமைப்பாளர்கள் பலரும் ஸ்ரேயா கோஷலுக்கே முக்கியத்துவம் தருகின்றனர். அவர் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.

இது மலையாள தேசத்து பாடகிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு டிவியில் பேட்டியளித்த சின்னக்குயில் சித்ரா, இசைத்துறையில் நடக்கும் பாலிடிக்ஸ் பற்றி தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

மலையாள இசையமைப்பாளர்கள் ஸ்ரேயா கோஷலுக்கே முன்னுரிமை தருவதாக தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். ஸ்ரேயா கோஷல் நல்ல பாடகி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மலையாளத்திலும் திறமையான பல இளைஞர்கள் முன்னுக்கு வர துடிக்கின்றனர். அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கலாமே என்பதுதான் என் கருத்து என்று கேட்டுள்ளார்.

சித்ரா சொல்வதைப் போல மலையாள பாடகிகளுக்கு இசையமைப்பாளர்கள் முன்னுரிமை கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதே நேரத்தில் தமிழ் திரைப்படங்களில் அந்த காலத்தில் தொடங்கி, சித்ரா, சொர்ணலதா, மின்மினி, சுஜாதா, உன்னி மேனன் என மலையாள பாடகிகள் லிஸ்ட் அதிகமாக இருக்கிறதே அதற்கு என்ன பதில் சொல்வார் சித்ரா. நமக்கு வந்தா ரத்தம்.. மத்தவங்களுக்கு வந்தா…??

tamil.filmibeat.com