பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து நடிகர் விஷால் இன்று நாடு திரும்பவிருக்கும் இலங்கை அகதிகளுடன் நற்பணி நாளாக கொண்டாடினார். இன்று விஷாலின் பிறந்த நாள். இந்த நாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்துள்ள அவர், நண்பர்களுடன் கேளிக்கை விருந்து கொண்டாட்டங்களைத் தவிர்த்துவிட்டார்.
இன்று நாடு திரும்பவிருக்கும் இலங்கை தமிழ் அகதிகளுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது:
நான் தாமிரபரணி படபிடிப்புக்காக இராமேஸ்வரத்தில் இருந்த போதுதான் அங்கு இருக்கும் இலங்கை அகதிகள் முகம் பற்றி எனக்கு தெரியவந்தது. எனக்கு முகாமை பற்றிய இன்னும் பல தகவல்களை என் அண்ணி ஸ்ரேயா அவர்களின் தோழியான பூங்கோதை சந்திரஹாசன் மூலமாக தெரிந்துகொண்டேன். மேலும் அவர் இயக்குனராக இருக்கும் ஆஃபர் (OFERR) தன்னார்வ தொண்டு நிறுவனம் பற்றி என்னிடம் கூறியவுடன் எனக்கும் அவர்களுடன் சேர்ந்து நற்பனி செய்ய ஆர்வம் ஏற்பட்டு தொடர்ந்து செய்து வருகிறேன்.
ஒவ்வொரு முறை நான் அங்கு சென்று திரும்பும் போது என்னுள் புத்துணர்ச்சி ஏற்படுவதை நான் உணர்கிறேன். என்னுள் அரசியல் நோக்கம் இருப்பதால்தான் நான் இதை போன்ற நற்பணிகளை செய்கிறேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். எனக்கு சத்தியமாக அதைபோன்ற அரசியல் நோக்கம் துளி கூட இல்லை. நான் ஒரு நடிகன், மக்களை மகிழ்விக்கும் மகத்தான பொறுப்பு எனக்கு உள்ளது. அதை மட்டும் சரியாக செய்தால் போதும் என்று நான் நினைகிறேன். மேலும் நான் ட்ராபிக் கான்ஸ்டபிள் போல இருந்து நற்பணி ஆற்ற நினைபவர்களுக்கு சரியான வழியைக் காட்டவே விரும்புகிறேன்.
நடிகர் கார்த்தி நேற்று இரவு என்னிடம் பேசிக் கொண்டு இருக்கும்போது பெண் குழந்தைகள் பலர் தாங்கள் படிக்கும் பள்ளியில் கழிப்பறை இல்லாத காரணத்தினால் அவர்களுடைய படிப்பையே நிறுத்திவிட்டுச் சென்றதாகவும், அதை கருத்தில் கொண்டு பாரீசில் உள்ள அரசு பள்ளி ஒன்றுக்கு அவருடைய அகரம் அறகட்டளை மூலமாக ஒரு இலட்சம் ருபாய் செலவில் கழிப்பறை கட்டிகொடுத்ததையும் சொன்னார். அதை போலவே ஒரு லட்சம் ருபாய் கொடுத்தால் வேறு ஒரு பள்ளியில் கழிப்பறை கட்டி கொடுக்கலாம் என்ற செய்தியை என்னிடம் தெரிவித்தார். நானும் அதை நிச்சயம் செய்ய உள்ளேன்,” என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மாணவர்களுக்கும், ICSAவை சேர்ந்த முப்பது மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும், பார்வையற்றவர்களுக்கும் ஒரு லட்சத்தி அறுபத்தி ஏழாயிரம் ரூபாயை நன்கொடையாகக் கொடுத்தார். அது போக அவர்களுக்கு காலணி மற்றும் காலுறைகளை வழங்கினார். மேலும் காலுறைகள் வழங்க தன்னுடைய நற்பணி மன்றத்தினர் மூலமாக மக்களை அணுகி நிதி பெற்று மேலும் இதை சிறப்பாக செய்யவுள்ளதாகவும் கூறினார்.
இதனை விளம்பரத்திற்கு அல்லாமல் மனிதாபிமான முறையில் நீங்கள் செய்திருந்தால், நீங்கள் செய்தால், இன்னும் நீங்கள் செய்தால் நான் உங்களை மனதாரப் பாராட்டுவேன். மனிதம் குறைந்து வரும் இந்தக் காலக் கட்டத்தில் உங்களுடைய பணி போற்றத்தக்க பணி. தொடருங்கள்!
எக்ஸ்செல்லென்ட் ! Bro
பாரட்ட வேண்டிய விடயம் ,இதுவும் ஒரு நடிப்பாகி விடகூடாது நண்பரே