தற்போது வெளியாகும் படங்களில் பத்தில் ஒரு படம்தான் வெற்றி அடைகிறது என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார்.
தயாரிப்பாளர்களோ நடிகர்களோ, இயக்குனர்களோ,கவிஞர்களோ ஒரு படம் தோல்வி என்றால் அதை மனதார ஒப்புக் கொள்வது என்பது இப்போதெல்லாம் இல்லவே இல்லை. எனினும்,ரசிகர்கள் இதை எல்லாம் நம்பிக் கொண்டிருக்க அவர்கள் ஒன்றும் கிணற்றுத் தவளை இல்லை. அவர்கள் கைக்குள் இன்டர்நெட் என்கிற பெயரில் இப்போது உலகமே அடங்கிக் கிடக்கிறது. இருப்பினும் பொய் சொல்வதை சினிமாக்காரர்கள் நிறுத்தியபாடில்லை.இதில் உண்மையைச் சொல்பவர்கள் அதிக நஷ்டப்படும் வினியோகஸ்தர்கள்தான்.
இந்நிலையில்தான் உண்மையை மனதார ஒப்புக்கொண்டுள்ளார் கலைப்புலி தாணு. தற்போது வெளியாகும் படங்களில் பத்தில் ஒரு படம்தான் வெற்றி பெறுகிறது என்றும், மீதி ஒன்பது படத்தின் தயாரிப்பாளர்கள் ரோட்டுக்கு வந்துவிடுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் நடிகர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் இவர்களுடன் ஆலோசனை நடத்தும் வரை 23ம் திகதி முதல் எந்தப் படப்பிடிப்பும் நடைப்பெறாது என்று தாணு கூறியுள்ளார்.
-http://www.4tamilmedia.com