தமிழ் சினிமாவில் உள்ளவர்களை சட்டென்று திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் நகைச்சுவை நடிகர் கருணாகரன். இனி ஒவ்வொரு படத்துக்கும் தான் வாங்கும் சம்பளத்திலிருந்து ஒரு லட்ச ரூபாயை விவசாயிகளுக்குக் கொடுக்கப் போகிறாராம்.
இதுகுறித்த தனது அறிவிப்பில், “ஒவ்வொரு படத்திற்கும் நான் வாங்கும் சம்பளத்தில் ஒரு லட்சத்தை போராடி வரும் ஏழை விவசாயக் குடும்பங்களுக்குக் கொடுக்க இருக்கிறேன். அதை இன்றிலிருந்தே ஆரம்பிக்க உள்ளேன்,” என்று கூறியுள்ளார். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் கிராமத்தில் உள்ள இறந்துபோன 113 விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து பண உதவிகள் கொடுத்தார் நானா படேகர். அவரது வழியில் தமிழகத்தில் கருணாகரன் இந்த நல்ல காரியத்தை ஆரம்பித்துள்ளார்.
விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்கும் பெரு முயற்சிக்கு கருணாகரனின் இந்த செயல் ஒரு நல்ல அடித்தளமாக அமையும்! வாழ்த்துகள்!
பணத்தை கொடுத்து மக்களை சோம்பேறியாக ஆக்காதேங்க ,எப்படி சம்பாரிப்பது கற்றுக்கொடுங்கள் ,பணத்தை கொடுத்து கொடுத்து எங்கடா தமிழர்களை நாசம் பன்னுறேங்க ,,உங்கள் ஆதாயத்திற்கு ,,,
இது ஒரு நல்ல பணி. தோடர வேண்டும். நீங்கள் மக்களுக்கு உதவும் போது மக்களும் உங்களுக்கு உதவுவார்கள். கொடுப்பவனுக்குத் தான் கிடைக்கும். அது தான் இயற்கை.