பச்சக்குழந்தையை எல்லாம் சீரழித்து ரூ.2,000க்கு விற்பனை செய்யும் ஐஎஸ்: கொந்தளித்த நடிகை ஏஞ்சலினா

angelina-jolieலண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பலாத்காரத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவது பற்றி விவரித்தார்.

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி செவ்வாய்க்கிழமை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஈராக் மற்றும் சிரியாவுக்கு சென்று அங்கு அவதிப்படும் பெண்களை நேரில் சந்தித்து பேசி அவர்களை பரிதாப நிலைமையை கேட்டறிந்தவர்.

அவர் நாடாளுமன்றத்தில் கூறுகையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பலாத்காரத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்கள். பலாத்காரத்தை பயங்கரமான தீவிரவாத ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்.

இது போன்று நாம் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. பலாத்காரம் செய்யுங்கள். இப்படி தான் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று தீவிரவாதிகள் கூறுகிறார்கள். இந்த விவகாரம் குறித்து நாம் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் 7 வயது சிறுமியைக் கூட விட்டுவைக்காமல் பலாத்காரம் செய்கிறார்கள்.

சிரியாவில் நடந்து வரும் போரால் ஈராக்கில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. சிரியாவில் நடக்கும் வன்முறையை தடுத்து நிறுத்த உலக நாடுகள் முன் வர வேண்டும். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பாலியல் பலாத்காரத்தை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளனர். போர் நடக்கும் பகுதிகளில் சிறுமிகளை கடத்தி பல முறை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை ரூ.2 ஆயிரத்து 700க்கு விற்பனை செய்கிறார்கள் என்றார்.

tamil.oneindia.com