உலக சினிமாவின் மிக உயரிய விருதாக கருதப்படுபவை ஆஸ்கர் விருது தான். இவ்விருதை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என ஆரம்ப நாட்களில் கமல்ஹாசன் போராடினார். ஆனால், ரகுமான் மிக எளிதாக இரண்டு ஆஸ்கரை கொண்டு வந்தார், அது இந்தியப்படம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை அதிக முறை ஆஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது குழுவினர்களுக்கு அனுப்பப் பட்டதில் கோலிவுட்டிற்கு இரண்டாவது இடம். ஆஸ்கருக்கு முதன் முதலாக அனுப்பப்பட்ட தமிழ் படம் தெய்வ மகன்.
இதை தொடர்ந்து நாயகன், அஞ்சலி, இந்தியன், ஜீன்ஸ், தேவர் மகன், ஹேராம் மற்றும் மேலும் சில படங்கள் தேர்வாகியுள்ளது. இந்த ரேஸில் அதிக அளவில் தேர்வானது கமல் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் தி குட் ரோட் என்ற படம் அனுப்பப்பட்டது, இந்த வருடம் கண்டிப்பாக காக்கா முட்டை படம் ஆஸ்கர் செல்லும் என எதிர்ப்பார்த்த நிலையில் கோர்ட் படம் தேர்வானது தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.
மேலும், அமீர்கான் நடித்த லகான் திரைப்படம் கடைசி ரவுண்ட் வரை சென்று விருது கிடைக்காமல் வந்தது வருத்தம் தான். ஆஸ்கர் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு கனவாக தான் உள்ளது. கண்டிப்பாக ஒரு நாள் இந்த கனவை இன்றைய சினிமா தாகம் உள்ள இளைஞர்கள் நிறைவேற்றுவார்கள்.
-http://www.cineulagam.com