படமாகிறது அப்துல் கலாம் சிந்தனைகள்

apj-abdul-kalamசென்னை, : மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம், இந்திய இளைஞர்களின் ரோல் மாடலாக இருந்தார். இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் பல கருத்துகளைச் சொன்னார்.

அந்தக் கருத்துகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் படம், ‘கலாமின் கனவுகள்’. சுந்தர் புரொடக்‌ஷன் சார்பில் டி.கே.கிருஷ்ணன், கே.சுந்தருடன் இணைந்து தயாரித்து இயக்குகிறார். ஜெய் அருள், பிரியங்கா நடிக்கின்றனர். ஜி.கனவேல் ஒளிப்பதிவு. ‘ஏற்கனவே ‘உறங்காத கனவுகள்’ என்ற படத்தை இயக்கி உள்ளேன்.

இதில் கலாமின் கனவுகளை இளைஞர்கள் எப்படி நிறைவேற்ற வேண்டும், அதற்கு என்ன ெசய்ய வேண்டும் என்பதை சொல்கிறேன். வெறும் போதனை செய்யும் படமாக இல்லாமல், திரைப்படத்துக்கான  அனைத்து அம்சங்களுடனும் இருக்கும்’ என்று சொன்னார், இயக்குனர் டி.கே.கிருஷ்ணன்.

– dinakaran.com