இந்திய சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்திய புலி..!

புலி படம் வெளியான நாள் முதல் மிகமோசமான விமர்சனங்களை சந்தித்தது. இதுவரை வெளியான தமிழ்சினிமா படங்களில் நெகடிவ் விமர்சனங்களால் அனைத்தும் தோல்வியை தழுவியுள்ளன. ஆனால் புலி அனைவர் கண்ணிலும் மிளாகாய்ப்பொடி தூவி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளது.

புலி படத்திற்கு நெகடிவ் விமர்சனம் கிடைத்தது எதற்காக?

இதற்கு முன் வெளியான ரஜினிகாந்தின் கோச்சடையான் படம் இந்தியாவின் முதல் முயற்சியாக வெளிவந்த மோஷன்கேப்சர் படம். இந்த படத்தில் நிறைய குறைகள் இருந்தாலும் படத்தின் திரைக்கதையும், இசையும் படத்திற்கு பக்கபலமாக இருந்து படத்தை பாராட்டும் படியான விமர்சனங்களை பெற்று தந்தது. ஆனால் புலி படம் அப்படி அல்ல. இந்த படம் பேண்டசியாக உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் ரசித்துபார்க்கக்கூடிய படத்தில் விஜய் இரட்டை அர்த்தங்களை பயன்படுத்தியுள்ளார். அரசியலை இந்த படத்திலும் திணித்துள்ளார். மேலும் படத்தின் திரைக்கதை வலுவிழந்து காணப்படுகின்றது. ஆனால் CG  மோசமாக இல்லாமல் நன்றாகவே உள்ளது. படத்திற்கு இசை மிகப்பெரிய மைனஸ். விஜய் வித்தியாசமான கதையை தேர்வு செய்தாலும், நடிப்பில் அவரால் வித்யாசம் காட்டமுடியவில்லை. இவைகள் தான் படத்திற்கு நெகடிவ் விமர்சனங்களை பெற்றுத்தந்தன.

புலியை பாராட்டிய மீடியாக்களை விட, விமர்சனம் செய்த மீடியாக்கள் தான் அதிகம். அப்படி இருப்பினும் இந்த படம் கத்தி படத்திற்கு இணையாக வசூலில் கலக்கிவருகின்றது. பாலிவுட்டில் வசூலில் சக்கைப்போடு போடுகின்றது. புலி படம் இந்திய சினிமாவில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. காரணம், புலி படம் வசூலும், படம் பார்க்கவைப்பதற்கான புதிய சூத்திரமும் தான்.

இந்த வெற்றிக்கு காரணம் என்ன?

புலி படத்தின் வெற்றிக்கு காரணம், படத்தை குழந்தைகள் மிகவும் ரசித்து பார்க்கின்றனர். இது மறுக்கமுடியாத உண்மை. மேலும் இந்த படம் குழந்தைகள் விரும்பி பார்ப்பதால், குழந்தைகளை தனியாக யாரும் அனுப்பமாட்டார்கள். குடும்பத்துடன் குழந்தைகளை அழைத்து வருகின்றனர். இதனால் ஒருவருக்காக இரண்டு அல்லது மூன்று பேர் கூடுதலாக படம் பார்க்கவருகின்றனர். இந்த படம் பள்ளிவிடுமுறை நேரத்தில் வெளியிட்டது மேலும் பக்கபலமாக அமைந்துவிட்டது. இதன்காரணமாக தான் இந்த மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.

குழந்தைகளுக்கான படம் எடுத்தல் தோல்வியை சந்திக்காது என்ற சூத்திரத்தை இந்திய சினிமாவில் பதித்துள்ளது இந்த புலி. மேலும் பாலிவுட்டில் இந்த படம் வெற்றிபடமாக மாறியுள்ளது. இதன் மூலம் இனி பேண்டசி படங்கள் நிறைய வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நெகடிவ் விமர்சனங்களை தாண்டி புலியின் இந்த வசூலை பார்த்து தமிழ்சினிமாவே கொஞ்சம் மெர்சலாகி உள்ளது.

-http://www.cineithal.com