மன்சூர் அலிகான் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘அதிரடி’. இதில் மன்சூர் அலிகான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் இவருடன் மௌமிதா, சஹானா, பூவிஷா, காவ்யா, ராதாரவி, செந்தில் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து நீண்ட நாட்களாக ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆனால், பெரிய ஹீரோக்கள் படங்கள் ரிலீசாலும், அதிக பட்ஜெட்டில் உருவான மொழி மாற்று படங்களாலும் இப்படம் ரிலீசாகாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தீர்வுகாணும் எண்ணத்தில் தயாரிப்பாளர் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், மன்சூர் அலிகானுக்கு ஆதரவாளர்கள் இல்லாத காரணத்தாலும், தயாரிப்பாளர் சங்கத்தில் பாதுகாப்புக்காக போலீஸ் நிறுத்தப்பட்டிருந்ததாலும் போராட்டத்தை மன்சூர் அலிகான் கைவிட்டிருக்கிறார்.
இது குறித்து மன்சூர் அலிகான் கூறும்போது, ‘நான் நடித்த ‘அதிரடி’ படம் முடிந்து நீண்ட நாட்களாக ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ரிலீஸ் செய்ய தியேட்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. டப்பிங் படங்கள் அதிகமாக தியேட்டர்களை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள். பிற மொழிகளில் உருவான படங்களுக்கே தமிழ்நாட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது வருத்தமளிக்கிறது. என்னுடைய ‘அதிரடி’ படம் இன்றைய சூழ்நிலையில் உள்ள அரசியல் நிலையையும் மக்களுக்கு கருத்து சொல்லும் படமாகவும் உருவாக்கியிருக்கிறேன்’ என்றார்.
-http://www.maalaimalar.com/
“மௌமிதா, சஹானா, பூவிஷா, காவ்யா” இவர்களெல்லாம் தமிழர்களா? தமிழர்களை வைத்து தமிழ் எடுக்கத் தெரியவில்லை. இதுல வேற டப்பிங் படத்தை இவரு குறை சொல்கின்றார். படத்தில் நடிக்கும் போது இருக்கும் புத்தியை வாழ்க்கை நடைமுறையிலும் உத்தமமாக கடைப்பிடிக்கின்றார் போலும்.
நாம் நம்மைத்தான் குறை கூற வேண்டும்– வெள்ளைத்தோலுக்கு அவ்வளவு வரவேற்ப்பு மரியாதை– இது யாருடைய தவறு–நமக்கு நாமே அண்ணாந்து பார்த்து துப்பிக்கொள்கிறோம்– பிறகு?
இஸ்லாமியனாக இருந்தாலும் துணிச்சல் மிக்க தமிழன் ..
அந்நியர்களை இறக்குமதி செய்வது தப்புதான் ..
அவர்கள் நாளை தமிழக தமிழர்களின் அன்னையாக வரமுடியும் ..அங்குள்ள தமிழர்களின் மனநிலை அவ்வாறு உள்ளது ..
ஜெயலலிதாவாகவோ/ குஷ்பூவாகவோ தமிழக அரசியலில் கால்பதிக்கலாம் .. தமிழச்சிகள் யாரும் நடிப்புத்துறைக்கு வர ஆசைபடுவதில்லை .. அப்படி வந்தால்கூட இந்தியப்பெண்கள்போல் தாராள மனசு இல்லாதவர்கள் ..இன்றைய தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இடமில்லை !
ஹிந்திய பெண்கள் தாராள மனது உடையவர்கள் சீ சீ சீ சீ ……