100 பேர் மொத்த தமிழகத்தையும் தன் கட்டுபாட்டில் வைத்திருக்கிறார்கள்

Neander Selvan's photo.

இன்று நடிகர் சங்க தேர்தலால் தெரிந்து கொண்ட தகவல்களில் முக்கியமானது:

தமிழ்நாட்டில் மொத்தம் 3000 நடிகர்கள் இருக்கிறார்கள் என.

தமிழ்நாட்டின் ஜனதொகை 6 கோடி என வைத்துக்கொண்டால் இந்த 3000 பேரில் இருந்து யாரோ ஒருவர் தான் கடந்த 40 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த ஊடகங்களும், தமிழ்நாட்டின் பத்திரிக்கைகளும், விளம்பர உலகமும் இந்த 3000 பேரை நம்பியே உள்ளன. அதிலும் இந்த 3000ல் பெரும்பாலானோர் நாடக, சின்னதிரை நடிகர்கள். உண்மையான அதிகார மையம் என்பது இதில் ஒரு 50 பேர் இருக்கலாம்.

ஆக மைனாரிட்டியிலும் மைனாரிட்டியான இந்த சிறு துறையே தமிழகத்தின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது.

இவர்களுடன் பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என சேர்த்தால் ஒரு 100 பேர் மொத்த தமிழகத்தையும் தன் கட்டுபாட்டில் வைத்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு எதாவது ஒன்று என்றால் நாடே அழுகிறது, மக்கள் வேலை வெட்டியை விட்டுவிட்டு இவர்கள் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களுக்காக வருத்தமோ, மகிழ்ச்சியோ அடைகிரார்கள். கட்சிகள், இயக்கங்கள் துவக்கபடுகின்றன. இவர்களை பற்றிய செய்திகளாலேயே ஊடகங்கள் சர்வைவ் ஆகின்றன.

இந்த பிரபலங்களுக்கும் நமக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்ன?

இவர்கள் இவர்களை பற்றி மட்டுமே கவலைபடுவார்கள். அம்பானி எங்காவது எந்த நடிகனுக்காவது ரசிகர் மன்றம் ஆரம்பித்ததையோ, வம்சம் சீரியலை உட்கார்ந்து பார்த்ததையோ நம்மால் காண இயலுமா?

ஆனால் நாம் இவர்களை போல இல்லாது நம்மை பற்றி கவலைபடாது இந்த பிரபலங்களை பற்றிய செய்திகளை படித்தே வாழ்க்கையில் அதிக நேரங்களை வீனடிக்கிறோம்.

அவர்களை மாதிரி நாமும் நம்மை பற்றி சிந்திக்க கற்றுகொண்டால் அதுவே உருப்படுவதற்கான வழியாகும்.

அதை விட்டுட்டு ஒட்டுமொத்த தமிழ்நாடும் நடிகர் சங்க தேர்தலை முன்னிட்டு பைத்தியமாக ஆனதை நினைத்தால் தலையை குட்டிசுவத்தில் முட்டிக்கலாம் என தான் தோன்றுகிறது.

அவர்கள் தான் படத்திலேயே “போயி புள்ள குட்டிய படிக்க வைங்க”னு சொல்றாங்களே?

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலை இல்லை என படத்தில் பாடுகிரார்கள்.

அதை எல்லாம் கேட்கிறோமா நாம்?

நாளைக்கு சரத்குமார் தோத்தத்துக்காக யாரச்சும் தீக்குளிச்சாலும் ஆச்சரியமில்லை.