![]()
சென்னை மற்றும் கடலூரில் பெய்த தொடர் மழையை தொடர்ந்து, தமிழக அரசிடம் வெள்ள நிவாரண நிதியை வழங்க பலரும், தலைமை செயலரிடம் நேரம் கேட்டு காத்திருக்கின்றனர். தி.மு.க., சார்பில், வெள்ள நிவாரண நிதியாக, ஒரு கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. அதை, தமிழக அரசிடம் வழங்க முடியாத நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டன அறிக்கை வெளியிட்ட பிறகே, தமிழக நிதித்துறை செயலர் சண்முகம், நேரம் ஒதுக்கிக் கொடுக்க, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ஒரு கோடி ரூபாய் கொடுத்தார். அதன் பின், பலரும், தமிழக அரசிடம் நிதி வழங்க, நேரம் கேட்டு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்யும் வெள்ள நிவாரணத்திற்காக நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார். நடிகர் விஜய், நிவாரண நிதியாக, ஐந்து கோடி ரூபாய் வழங்க காத்திருக்கிறார். தமிழக அரசு தரப்பில், அதிகாரிகள் நேரம் ஒதுக்காததால், அவர் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே நடிகர் சங்கம் சார்பிலும் நிதியுதவி திரட்டப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த், சிவக்குமார்-சூர்யா-கார்த்தி குடும்பத்தார், விஷால், தனுஷ், சிவகார்த்தி்கேயன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். நிதி எல்லாம் ஒன்றாக திரட்டப்பட்டு நடிகர் சங்கம் சார்பில் முதல்வரிடம் வழங்கப்பட இருக்கிறது.
-http://www.cineulagam.com


























அம்மாவுக்கு இதெல்லாம் அரசியல் விளையாட்டு! யார் செத்தால் அவருக்கு என்ன? அவர்களெல்லாம் ஏழைகள். யார் கேட்கப் போகிறார்கள்? ஆனால் நடிகர் விஜய் இதற்கெல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவருக்கு நிறைய ரசிகர் கூட்டம் உள்ளது. அவர்களோடு சேர்ந்து இவர் இந்நேரம் களத்தில் இறங்கயிருக்க வேண்டும். காரணம் சொல்லிக் கொண்டிருந்தால் சாதனை இல்லை!
மலேசியா இந்து சங்கமோ , மா இ க வோ வெல்ல நிவாரண நிதி உதவி செய்ய எண்ணம் உண்டா ? ஒரு செய்தியும் காணும்.செம்பருத்தி நிதி வசூல் செய்யலாமே.
SYABAS ஆபிரகாம் அவர்களே வேண்டிய பொருட்களை அவர்களே வாங்கி அனுபலாமே ….ஆனால் விஜயின் நல்ல மனசுக்கு வாழ்துக்கள் வாழ்க அவர் ……நான் ஒரு அஜித் விசிறி ….
உலகில் மற்றவர் எல்லாருமே தமிழகம் சந்திக்கும்
இந்த பேரிடரை, உயிரிழப்புகளை –
இப்படியெல்லாம் பார்க்கும்போது, வருந்தி, துடித்து
ஓடி உதவ முன்வரும்போது
..5 வயது முதல் இன்றைய 60 வயது வரை தமிழ் மக்களின்
காசில் வயிறு வளர்த்து இன்று உலக நாயகன் என்று
உலா வந்து கொண்டிருக்கிற உதவாக்கரை நாயகன்
வெளியிட்டுள்ள அறிக்கை தன்மானமுள்ள எந்த தமிழரையும்
கொதித்து எழவே செய்யும்.
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=156293 ) நன்றி நக்கீரன்