பீப் பாடல்: மறைப்பதற்கோ, ஓடுவதற்கோ ஒன்றுமில்லை…சட்டத்தை எதிர்கொள்ளத் தயார் – சிம்பு

simbu-anirudhசென்னை: பீப் பாடல் விவகாரத்தில் மறைப்பதற்கோ, ஓடுவதற்கோ ஒன்றுமில்லை சட்டத்தை எதிர்கொள்ளத் தயார் என்று நடிகர் சிம்பு தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய பீப் பாடல் விவகாரத்தில் கோவை போலீசார் சிம்பு, அனிருத் இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மேலும் சிம்பு, அனிருத்தை கைது செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், உருவ பொம்மை மற்றும் புகைப்படங்கள் எரித்தல் ஆகியவை தொடர்ந்து அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சற்று முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிம்பு “சட்டத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். மறைப்பதற்கோ, ஓடுவதற்கோ ஒன்றுமில்லை. நான் கடவுளை நம்புகிறேன் எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார். நேர்மை மற்றும் சத்தியத்தின் மீது நான் வலுவான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறியிருக்கிறார்.

tamil.oneindia.com