குடிக்க தண்ணீரின்றி தவித்த சென்னையில் தங்கமகன் கட்-அவுட்டுக்கு 100 லிட்டர் பாலாபிஷேகம்

Thanga-Maganசென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, குடிநீருக்கும் வழியின்றி தவித்த சென்னை இயல்பு நிலைக்கு திரும்பிவரும் நிலையில், தனுஷ் நடித்த தங்கமகன் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டரில் அவரின் கட்-அவுட்டுக்கு 100 லிட்டர் பால் வீணாக கொட்டி தீர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் ரசிகர்களின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாக்கியுள்ளது. சிலர் வேதனையாகவும் இந்த கருத்தை கூறியுள்ளனர்.

-மழை, வெள்ளத்தின்போது, அரை லிட்டர் பால் ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டதால் வேதனையி்ல இருந்த மக்கள், கட்-அவுட் செய்தியை பார்த்து அதைவிட அதிக வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

-“அரைலிட்டர் பாலை 100/200 ரூபாய்க்கு விக்கிறாங்கன்னு பொங்கின #அப்ரசண்டிகளா தங்கமகன் படத்துக்கு சென்னைல பாலாபிஷேகம் நடந்துச்சாமே எங்க போனிங்க” என இந்த டிவிட் கூறுகிறது.

-சென்னை இயல்பு நிலை’ எப்டினு கேட்குறீங்களா? தங்கமகன் படம் ரிலீஸ் எனவே சத்யம் தியேட்டர் முன்பு தனுஷின் கட் அவுட்டுக்கு 100 லிட்டர் பால் அபிசேகம் என்று கிண்டல் செய்கிறது இந்த டிவிட்.

-பத்து நாளைக்கு முதல்ல (முன்னால) பச்ச தண்ணீர் கூட இல்லாம தவிச்ச சென்னைல இன்னிக்கு தங்கமகன் திரைப்பட கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் பன்ராய்ங்க. உலகம் பூரா இருந்து உங்களுக்கு உதவி செய்யும் எங்களை எல்லாம் எதை கொண்டு அடித்துக் கொள்ள, சொல்லுங்கடா, என்று, சென்னை வெள்ளத்திற்காக உதவி செய்ததாக கூறும் இந்த நபர் பேஸ்புக்கில் கருத்து கூறியுள்ளார்.

tamil.oneindia.com