என் தந்தையைக் கடத்திய வீரப்பனை சினிமாவிலாவது கொல்ல முடிந்ததே – சிவராஜ்குமார்

killing-veerappanசென்னை: என் தந்தை ராஜ்குமாரை கடத்திய வீரப்பனை சினிமாவிலாவது பழிவாங்க முடிந்ததே என்று கன்னட நடிகர் சிவராஜ் குமார் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

சந்தனக்கடத்தல் வீரப்பனை மையமாகக்கொண்டு கில்லிங் வீரப்பன் என்ற பெயரில் ஒரு படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகி இருக்கிறது.

இதில் ராஜ்குமாரின் நடிப்பு மிகவும் நன்றாக இருப்பதாக ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. இந்நிலையில் தனது அப்பாவைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்த வீரப்பனை இந்தப் படத்தின் மூலமாவது என்னால் கொல்ல முடிந்ததே என்று கன்னட நடிகர் சிவராஜ்குமார் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்ற சம்பவம் அந்த சமயத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு விஷயமாக இருந்தது.

இது குறித்து அவர் கூறும்போது “கில்லிங் வீரப்பன் படத்தில் எனக்கு நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள வேடம். இதில் ஹீரோயிசமோ, பஞ்ச் வசனங்களோ கிடையாது.

மேலும் இக்கதை பற்றி நான் விரிவான ஆராய்ச்சி எதுவும் செய்யவில்லை. இயக்குனர் ராம் கோபால் வர்மா சொன்னதைத் தான் படத்தில் நடித்துள்ளேன். என் தந்தை ராஜ்குமார் கடத்தல் சம்பவம் பற்றிய விவரம் எதுவும் இதில் விரிவாக சொல்லப்படவில்லை.

ஆனால், எனக்கு தனிப்பட்ட திருப்தியை இந்த படம் தந்திருக்கிறது. சினிமாவிலாவது வீரப்பனை என்னால் கொல்ல முடிந்தது மகிழ்ச்சி. இதன் மூலம் சினிமா பாணியிலான நியாயம் எனக்கு இதில் கிடைத்தது” என்று கூறியிருக்கிறார்.

tamil.filmibeat.com