கடலூர் மாவட்ட கிராம மக்களுக்கு ராகவா லாரன்ஸ் உதவி

rl

சென்னை, கடலூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ள சேதம் அனைவரையும் உதவிக்கரம் நீட்ட வைத்தது. நடிகர் ராகவா லாரன்ஸ் பல்வேறு உதவிகளை வழங்கினார்.

இப்போது கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வில்லியநல்லூர், சிலம்பி மங்கலம், தொட்டி தோப்பு, அகரம், கிளிஞ்சினிப்பட்டு போன்ற ஊர்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1 கோடி செலவில் நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ஒரு மூட்டை அரிசி, வீட்டு உபயோக பொருட்கள், பாத்திரங்கள், பாய், போர்வை, துண்டு உள்பட ஒரு குடும்பத்துக்கு 1 மாதத்துக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.

லாரி, லாரியாக வந்து இறங்கிய நிவாரண பொருட்களை கிராம மக்கள் குடும்பத்துடன் வந்து, குதூகலமாக வாங்கி சென்றனர்.

குடும்பத்தில் உள்ள அனைவரும் அதை வீட்டுக்கு சுமந்து சென்ற காட்சி காண் போரை பரவசப்பட வைத்தது. எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ராகவா லாரன்ஸ் செய்த இந்த உதவியை, அந்த கிராம மக்கள் பாராட்டினார்கள். உதவி பெற்றவர்கள் ஒருவருடன் ஒருவர் அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

-http://tamilcinema.news