பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவேன்: சிம்பு

406811-simbu

பீப் பாடல் விவகாரம் குறித்து நடிகர் சிம்பு தனது டுவிட்டரில் நேற்று மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘‘எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் சிலர் என்னை கீழே தள்ளி விட முயன்றாலும் அவற்றில் இருந்து ரசிகர்கள் பெருமை கொள்ளும் விதத்தில் மீண்டு வருவேன்’’ என்று கூறியுள்ளார்.

சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் ‘டிரைலர்’ புத்தாண்டில் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்றது. இணையத்தளத்தில் டிரைலரை இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

இது சிம்புவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து சிம்பு நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த படத்தை பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

-http://tamilcinema.news