கேரளாவின் சுற்றுலாதுறை சார்பில் திருவனந்தபுரத்தில் நிசாகந்தி நடன, இசை விழா நடத்தப்படுகிறது. வரும் புதன்கிழமை தொடங்கவுள்ள அவ்விழா வரும் 27ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற இருக்கிறது.
இந்த ஆண்டு கேரளா அரசின் நிசாகந்தி சாதனையாளர் என்ற விருதைஇசைஞானி இளையராஜாவுக்கு முதல்வர் உம்மன்சாண்டிவழங்கினார்.
அப்போது பேசிய உம்மன்சாண்டி, இளையராஜாவுக்கு நிசாகந்தி விருதை வழங்குவதன் மூலம் கேரளா பெருமைகொள்கிறது. கேரளாவில், இளையராஜா சங்கீத அகாடமி தொடங்க அரசு சார்பில் நிலம் தருவதாக கடந்த 1990-ம் ஆண்டு வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
25 ஆண்டுகளுக்கு பின் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட உள்ளது. கேரளாவில் இளையராஜா சங்கீத அகாடமி தொடங்குவதற்கு 5 ஏக்கர் நிலம் அரசு சார்பில் உடனே வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன் என்றார்.
-http://www.cineulagam.com
உம்மன்சாண்டி அவர்களுக்கு நன்றி.
நல்லது! இருப்பினும் கேரளா, கர்நாடக ,ஆந்திரா,சிறிய லங்காவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!
நிச்சயம் இளையராஜாவை கேரள அரசாங்கம் கௌரவிக்க வேண்டும்.நிறைய கேரளப் பாடகர்களை வளர்த்து விட்டவர் அவர். அந்த நன்றியுணர்வு அவர்களிடம் இருக்கிறது. வாழ்த்துகள்!