சமீபத்தில் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற தனியார் டிவி சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ரசிகர் ஒருவரிடம் விக்ரம் நடந்துகொண்ட பணிவு, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
அதாவது, விழா மேடைக்கு கீழே அமர்ந்திருந்த விக்ரமை காண ரசிகர் ஒருவர் பாய்ந்தோடி வந்து, விக்ரமை கட்டித்தழுவி அவரை அரவணைத்துக் கொண்டார். ரசிகரின் இந்த செயலை விக்ரம் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும், அருகிலிருந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகரை விக்ரமிடம் இருந்து பிரித்து, அவரை ஆவேசத்துடன் கீழே தள்ளிவிட்டனர்.
ஆனால், உடனே விக்ரம் எழுந்துவந்து அந்த ரசிகரை ஏதும் செய்யாதீர்கள் என்று பாதுகாவலர்களை விலக்கிவிட்டு, அவரை தன்னுடன் அழைத்து அவர் விருப்பத்தை கேட்டார். ரசிகரும், விக்ரமுடன் போட்டோ எடுத்துக் கொள்ளவேண்டும் என்று தனது ஆசையை அவரிடம் கூற, விக்ரமும் அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள செல்போனை முன்னோக்கி எடுத்தார்.
ஆனால், செல்பி வேண்டாம் என்று ரசிகர் சைகை செய்ய, அருகிலிருந்தவரிடம் செல்போனை கொடுத்து விக்ரமை கட்டியணைத்தவாறு அந்த ரசிகர் போட்டோ எடுத்துக்கொண்டார். பின்னர் அந்த ரசிகர் விக்ரமை கட்டிப்பிடித்து அவரது கன்னத்தில் முத்தமிட்டார். இது எல்லாவற்றையும் விக்ரம் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். அந்த ரசிகர் ஒரு மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.
-http://cinema.nakkheeran.in
உங்கள் மனிதாபிமானத்திற்கு தலை வணங்குகிறேன். வாழ்த்துகள்!
அடுத்த தமிழ்நாட்டின் முதல்வர் விக்ரம்.
நாசமா போச்சி ….!!!!
VIKRAM SIRANTHA MANITHARI ORUVAR…KADINA ULLAIPIRKUM PER PONAVAR
நடிகர் விக்ரம் தமிழ் இன அரச மரபை சார்த்தவர் ..
உயர் குணங்களும் பண்பாளரும் கூட ..
பலருக்கு உதவுகிறார் மற்றவர்களுக்கு தெரியாமல் ..
சிலவேளைகளில் உதவி பெற்றவர்கள் ஊடகங்களிடம் கூறிவிடுகிறார்கள் …
கும்கி வடுக குடிகார கோமாளிஎல்லாம் தமிழனை ஆழ ஆசைப்படும்போது ஒருதமிழன் ஆழலாம்…ஆனால் உங்கள் ஆசையை நிறைவேற்ற விக்கிரம் சம்மதிக்க வேண்டுமே ..
கருணா நிதி காமராசர் ஆட்சியை வீழ்த்தி முதலமைச்சராக இருக்கிறார் மீண்டும் தேர்தல் வருகிறது பிரச்சாரத்தில் கருணா நிதி காமராசரை இவ்வாறு கூறுகிறார். காடு வா வா என்று அழைக்கிறது இந்தவேளையிலும் சிலருக்கு முதல்வர் நாற்காலி ஆசைபோகவில்லை என்கிறார் ..(மீண்டும் காமராசு வேண்ருவிடுவானோ என்கிற பயம்) .. என்றைக்குமே கடும்சொற்கள் பயன்படுத்தாத காமராசர் பதில் இவ்வாறு வருகிறது நீயெல்லாம் அமர்த்த நாற்காலியில் நான் இனிமேலும் அமருவேனா ?
விக்கிரமும் காமராசு போன்ற உயர் பண்பாளர் ..
நாகரிகமற்ற சூத்திர திராவிட அரசியல் உலகத்திலேயே அசிங்கமானது ..எல்லோரும் விரும்பமாட்டார்கள்