பிரான்ஸ் சினிமாதுறையின் விருதான Henri – Langlois விருதைபெறுவதற்காக உலகநாயகன் கமல்ஹாசன் இந்த வருடம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2006ல் இருந்து இந்த விருது உள்ளூர் மற்றும் சர்வதேச பிரசித்தி பெற்ற சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அப்போது ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், வருடத்திற்கு 200 படங்கள் வெளிவரும் இந்தி சினிமா உலகிற்கு தெரிந்திருக்கிறது, ஆனால் 700 படங்கள் வெளிவரும் தமிழ் சினிமாவை உலகம் கண்டுகொள்தில்லை என்று தனது வருத்தத்தை கூறியுள்ளார்.
-http://www.cineulagam.com
ஐயா கமல், நீங்கள் சொல்வது உண்மை. இந்தி சினிமாவில் ஹீரோயிச வழிபாடு குறைவு, திரைக்கதை, நடிப்பு, இயக்கம் அங்கே பிரதானம், ஆனால் தமிழ்ச்சினிமாவின் நிலை என்ன ? () தானே அய்யா இங்கே முக்கியம், இங்கே அவனவன் நடிகனுக்கு, கட் அவுட் வைக்கிறான், சூடம் ஏத்துறான், பாலை ஊத்துரான், காவடி எடுக்கிறான் ஏன் (தெறி படத்துக்கு தீச்சட்டி கூட எடுக்குறான்கள்), நடிகைகளுக்கு கோவில் கட்டுவது, இந்த லட்சணத்திலே “தலைவா நீ நடிக்கவே வேணாம், நடந்தா போதும்” வீர வசனங்கள் வேறு, எப்படியய்யா எடுபடும் தமிழ் சினிமா ? உங்களை அதிகம் பிடிக்காது, பெண்களை ஓவர் போகப்பொருளாக சினிமாவில் நீங்கள் காட்டும் சீனாதானா விதங்கண்டு, ஆனால் ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக்கிய பெருமை கண்டு தங்களுக்கு நிச்சயம் தலைவணங்கித்தான் ஆகவேண்டும். வாழ்க
வருத்தப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை! கண்டு கொள்ளுவது மாதிரி சினிமா எடுத்தால் உலகம் கண்டு கொள்ளும்! அதுவரை பொறுமை காக்க!
வடுக தொலைகாட்சிகளில் தமிழனை தமிழனை கோமாளியாக்கி
வடுக நடுவர்களால் தங்கள் இனத்த்க்கு சார்பாக மகுடம் சூட்டும் தொலைகாட்சிகளின் தில்லுமுல்லுகளை தொளிரிக்கும் நகைசுவை காணொளி
https://www.facebook.com/115924275177212/videos/712657795503854/
கமல் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள மறந்து விட்டீர். எண்ணிக்கை முக்கியமல்ல தரமே முக்கியம். இங்கே தான் பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாமே. இவர்களுக்கு தரமா முக்கியம்…. பணம் அல்லவா முக்கியம். மேலும் தற்போது வரும் தமிழ் படங்களில் தரம் என்பதே கிடையாது. அழகான கதாநாயகிக்கு லுங்கி போட்டு தெருவில் ஆடும் அசிங்கமான கதாநாயகர்கள். பார்க்கவா முடிகிறது… சொல்லும் அய்யா..
தனி தமிழ் நாடு அமைத்து பாரும் உலகமே உம்மை திரும்பி பார்க்கும்.
தமிழர் நாடு தகவல் சாதனங்கள் தமிழன் கையில் இருப்பது அவசியம்…மற்றவன் தரத்தை கீழிருப்பு செய்பவன் மற்றவன் என பொருள்படும்.