கொழும்பில் நடைபெறவிருந்த ரஹ்மான் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து : காரணம் இதோ!

 

இலங்கை தலைநகரான கொழும்புவில் வரும் 23-ம் தேதி நடைபெறுவதாக இருந்த ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. அதிர்வு இணையம் உட்பட , பல தமிழ் செயல்பாட்டாளர்கள் ரஹ்மானை கொழும்பு செல்லவேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வந்தார்கள். இதுபோக அதிர்வு இணையத்தில் ரஹ்மான் இலங்கை செல்லக்கூடாது என்ற பெட்டிஷனில் பல நூறு பேர் தமது , விமர்சனங்களை தெரிவித்து வந்தார்கள். அவை அனைத்தையும் நாம் நேற்று முன் தினம் ரஹ்மானுக்கு நேரடியாக மின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைத்திருந்தோம்.

இன் நிலையில் தான் கொழும்புக்கு செல்லவில்லை என்றும். கொழும்பில் நடக்க உள்ள நிகழ்ச்சியை உடனே ரத்துச் செய்யவும் என்று தனது மேனேஜருக்கு ரஹ்மான் தெரிவித்துள்ளார். அத்தோடு தனது அடுத்த நிகழ்ச்சி மலேசியாவில் 4ம் திகதி மே மாதம் நடக்கும் என்று அவர் அறிவித்துள்ளார். இதனால் சிங்கள மக்கள் இடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பல அரசியல்வாதிகள் ரஹ்மான் இலங்கை வரும்போது அவரோடு மேடை ஏறி கை குலுக்கி தமிழர்களின் ஆதரவைப் பெற திட்டம் தீட்டி இருந்தார்கள். ஆனால் அந்தக் கனவு நடக்காமல் போய்விட்டது.

நீங்கள் உண்மையான முஸ்லீமாக இருந்தால் , ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைத்த பின்னர் இலங்கை செல்லுங்கள் என்று தமிழ் நாட்டில் உள்ள பல தமிழ் உணர்வாளர்கள் கோரிக்கை விடுத்து இருந்தார்கள். தமிழ் நாட்டில் மற்றும் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே ரஹ்மான் இலங்கை செல்வதை தவிர்த்துள்ளார். இது மைத்திரி அரசுக்கு நேரடியாக விழுந்துள்ள முதல் அடி ஆகும். ஏன் என்றால் ரஹ்மான் இசைக்கும் மேடையில் மைத்திரியும் உட்காரா திட்டம் தீட்டி இருந்தார். ஆனால் அது பலிக்காமல் போனது.

-http://www.athirvu.com