நடிகர் விஜய்யின் தெறி பட வெளியீட்டினை முன்னிட்டு யாழ். விஜய் நற்பணி மன்றத்தினரால் செல்லா திரையரங்கில் பாடசாலை மாணவர்களுக்கான உதவிகளை வழங்கி வைத்துள்ளனர்.
வழமையாகவே திரைப்படங்கள் வெளிவரும் வேளைகளில் யாழ். சினிமா ரசிகர்கள் அட்டகாசம் செய்வதோடு, பாலாபிசேகம் செய்து தமது சந்தோசத்தை வெளிப்படுத்துவார்கள்.
ஆனால் தற்பொழுது எல்லாம் அதற்கு முற்றிலும் மாறாக உதவி செய்யும் மனப்பாங்கை யாழ். இளைஞர்கள் வளர்த்திருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகின்றது.
கடந்த முறை அஜித்தின் படம் வெளிவந்த வேளை அஜித் ரசிகர்கள் விசேட தேவையுடையோர்க்கு உதவிகள் வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் சித்திரைப் புத்தாண்டு வெளியீடாக வெளிவந்த தெறி படத்தினை முன்னிட்டு ரசிகர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு காலணி, புத்தகப் பை மற்றும் வறுமை கோட்டிலுள்ள இரு குடும்ப தலைவிகளுக்கு இரண்டு தையல் இயந்திரங்களையும் வடமாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட் வழங்கி வைத்தார்.
-http://www.tamilwin.com
இது உண்மையிலேயே மிகவும் நல்ல செய்தி. சினிமா என்பது மாயை/கற்பனை என்ற நிலை மாறி பல ஆட்சியாளர்களையும் உருவாக்கிய களமாகவும் திகழ்கிறது. மேலை நாட்டில் அதிபர் ரேகன், தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, தற்போது விஜயகாந்த்(முயற்சியில்) என இன்னும் அதிகமானோர் பெயர்களுடன் இப்பட்டியல் நீள்கிறது.
தன் உள்ளம் கவர்ந்த நடிகனின் ஆளுமை ரசிகனை வெகுவாக ஆட்டிப்படைக்கிறது. அந்த நடிகனை பற்றிய பிரேமை கடவுள் நிலைக்கு ரசிகனின் மனதில் கட்டமைக்கப்படுகிறது. எனினும் “பால் அபிக்ஷேகம்”, “கட் அவுட் மாலை மரியாதைகள்”, “சூடம் காட்டுதல்”, “தீச்சட்டி தூக்குதல்” போன்றவை ரசிக்கும்படியாக இல்லை, அவை மிகவும் கேலிக்கூத்தாக அமைகிறது. கூடவே மதத்தை இழிவுபடுத்தும் செயலாகவும் அமைகிறது.
எங்காவது ஒரு ஹாலிவூட் நடிகருக்கு எந்த ரசிகனாவது “சர்ச்” வைத்து வழிபட்டதை கேள்விப்பட்டிருக்கிறோமா ? எங்காவது ஒரு அரேபிய நடிகருக்கு “தர்க்கா” அமைத்து வழிபட்டதை பார்த்திருக்கிறோமா ? அங்கே அவை அந்தந்த சமயங்களால் அனுமதிக்கப்படுமா ? ஆனால் இந்து சமயத்தில் மட்டும் ஏன் நடிகர்களுக்கு கோவில் அமைத்து கும்பிடுவதை அனுமதிக்கின்றார்கள் என்பது புரியவில்லை. (இங்கேயும் தைப்பிங் வட்டாரத்தில் உள்ள அய்யனார் ஆலயத்தில் எம்.ஜி.ஆருக்கு சிலை அமைக்கப்பட்டு, நடிகர் சத்தியராஜைக்கொண்டு திறப்பு விழா கண்டது அனைவரும் அறிந்ததே.)
இது போன்ற மடமைகள் தவிர்க்கப்படவேண்டும். பதிவில் குறிப்பிட்டதுபோன்ற நல்ல சேவைகள் இரசிகர்களால் தொடரப்பட வேண்டும். நம் வாழ்வினின்று பிரிக்க முடியா நிலையை எட்டியிருக்கும் சினிமா குறித்த தெளிவான புரிதல்கள் நமக்கு அவசியம். இதை நமது இளவல்களிடம் கொன்டு சேர்க்க வேன்டிய கடப்பாடும் நமக்கு உண்டு.
nalla
arivu ulla யாழ்ப்பான மக்கள் .மற்றவர்களிக்கு புத்தி வரட்டும் .வாழ்க தமிழ் மக்கள்
.. அவர்கள் உண்மையில் சூருடன் சாப்பிடுகிறார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை
மற்றவர்களுக்கு உதவிகள் வழங்குவதில் கூட சினிமாவை பயன்படுத்திதான் வழங்க முடியும் என்ற ஒரு நிர்பந்த நிலைக்கு தள்ளப் பட்டு விட்டான் தமிழன்.2009 முன் வரை ஈழத் தமிழன் இதற்கு விதி விலக்காக இருந்தான்.இப்பொழுது அவனையும் சினீமா வாட்டி எடுக்க தொடங்கி விட்டது.பிரபாகரனின் மறைவுக்குப் பிறகு கலாசார சீரழிவு அங்கு கொடி கட்டிப் பறக்கிறது.
ஜாகிர் நாய்க் சொன்ன ஒரு நல்ல கருத்து , கோயிலை பார்த்தோ , சாமியார்களை பார்த்தோ உன் சமயத்தை அனுசரிக்காதே .. உன் பகவத் கீதையில் சொல்லியவற்றை மட்டும் அடிப்படையாக வைத்து உன் சமயத்தை அனுசரி !!!
அதையாவது செய்கிறார்கள் என்று சந்தோசம் படுவது சிறப்பாகும் .
முட்டாளுங்க ஒரு சினிமா படத்துக்காக இப்படி கூத்து அடிக்கிறானுங்க ,சொந்த புத்தி இவனுங்களுக்கு வேலை செய்யாது போலிருக்கே ,,ஞாபகம் இருக்கட்டும் விஜய் இல்ல ஜோசப் விஜய் https://www.youtube.com/watch?v=oXs6Gwe2yH4
கரிகாலன் அவர்களே அப்படி போடுங்க ,,விஜய் சொந்த பணத்தை யாழ்ப்பான மக்களுக்கு கொடுக்கவே மாட்டார் ,,ஏன்னா அவர் ஜோசப் விஜய்
யாழ்ப்பான விஜய் ரசிகர்கள் தான் உதவி செய்கிறார்கள் தவிர ,விஜயே நேரடியாக வந்து சொந்த பணத்தை உதவி செஞ்சதை பார்த்ததே இல்லையப்பா ,,கூத்தாடி சொன்ன இனிக்கிறது ,,ம்ம்ம்ம்